International
ஆண்டு பலன் - 2018

மீனம் ராசி 2018 புத்தாண்டு பலன்கள்!

மீனம் ராசியினருக்கு 2018ம் வருடம் இனம் புரியாத பயம் நீங்கி தன்னம்பிக்கை பெருகும் ஆண்டாக இருக்கிறது. இரண்டரை ஆண்டு காலமாக சனி பகவான் பத்தாம் இடத்தில் இருப்பதால் மீனம் ராசியினருக்கு எல்லையற்ற நன்மைகள் நடைபெறும். குரு பகவான் எட்டாம் பாவத்தில் இருந்தாலும், சுக்ரன் வீட்டில் இருப்பதால் எவ்வித தீய கேடு பலன்கள் செய்ய மாட்டார். மீனம் ராசியினருக்கு இந்த புத்தாண்டு நல்ல பலன்கள் கொடுத்தாலும் செலவுகள் அதிகமாக இருக்கும். அதற்கேற்ப நிலையான தொழில், வேலை, ஜீவனஸ்தானம் வலு பெறுவதால் சீராக வருமானம் வரக்கூடும்.

பொதுவான பலன்கள்

மீனம் ராசியினருக்கு சுப விரையம் ஏற்படும் ஆண்டாக இருக்க போகிறது. புதிய வீடு, திருமணம், குழந்தைகளால் செலவுகள் இருக்கும். மீனம் ராசியினருக்கு இந்த புத்தாண்டு வருமானம் எவ்வித தடையும் இருக்காது என்றாலும் செலவுகளை கட்டு படுத்த முடியாமல் இருக்கும். இந்த வருடம் பிற்பகுதியில் நல்ல வருமானம் ஈட்டலாம் என்பதால் அதற்கான திட்டங்கள் தீட்டி சேமித்து கொள்ளுங்கள். வருகின்ற வாய்ப்புகள் நல்ல விதமாக பயன்படுத்தி கொள்ளுங்க. வீண் பேச்சு, வாய்ச்சவடால் பேசி வந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்

அலுவலகத்தில் பிறர் சொல்லும் கருத்தை கேட்டு கொண்டு பிழையை திருத்தி கொள்ளுங்க. ஆர்வம் இருந்தால் மட்டுமே போதாது அதற்கேற்ப உங்கள் திறமை, பக்குவம் வளர்த்து கொள்ள வேண்டும். யாரையும் புறம் பேசாதீர்கள். சிறு விஷயங்கள் இருந்தாலும் அது பெரிது படுத்தாமல் இருப்பது நன்மை தரும். இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசை படாதீர்கள். தளர்ச்சி இல்லாமல் உழைத்தால் உங்கள் வளர்ச்சிக்கு ஏற்றார் போல் முன்னேற்றம் காணலாம்.

செய்யும் வேலையில் எச்சரிக்கையுடன் செயல் புரிவது நன்மை தரும். அலுவலகத்தில் இருப்பவர் பற்றியோ, பணியிடத்தில் இருக்கும் பிரச்சனை கூறி மற்றவர்களுக்கு புரளி ஏற்படுத்தாதீர்கள். தானுண்டு தன் வேலை என்று இருந்தால் போதும். இதுவரை போதிய வருமானம், நல்ல வேலை அமையாமல் தவித்து கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் அடையும் காலமாக இருக்கிறது.

வியாபாரம் / தொழிற்பிரிவினர்

இருக்கும் வியாபாரம் விட்டு வேறு வியாபாரம் செய்யலாமா என்று தோன்றக்கூடும். வெளிநாடு, வெளிமாநிலம் சென்று வேலை செய்யும் வாய்ப்பு வரக்கூடும். தொழில் சம்மந்தமான தூர பயணங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பயன்படுத்தி லாபத்தை ஈட்டலாம். பொருட்களை தரமாகவும், நியமாகவும் விற்றல் மக்கள் கூட்டம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். வணிகர் சங்கம் தலைமை பொறுங்கள் ஏற்க கூடிய சூழல் வரக்கூடும்.

ஜூலை நான்காம் தேதி முதல் டிசம்பர் வரை தொழில், வியாபாரம் போன்றவற்றில் மந்த நிலை மாறும். தொழிலில் வளர்ச்சியும் அதனால் வருமானம் அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலமாக இருக்கிறது.

பெண்கள்

கணவன் மனைவி உறவு சீராக இருக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கை சிறப்பாக நடத்துவீர்கள். குடும்பத்தில் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வீட்டில் எவ்வித பிரச்சனை இருக்காது. அலுவலகத்தில் மேலதிகாரி மற்றும் சக ஊழியர்கள் உங்களை புரிந்து கொள்ளாமல் அவ்வப்பொழுது தொல்லை கொடுப்பார்கள்.

திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் இந்த ஆண்டில் நல்ல வரன் அமையும். முதல் வாழ்க்கை கோணலாகி நொந்து போனவர்கள் இந்த ஆண்டு மறுமணம் ஆகும். சகோதர, சகோதரிகளால் நன்மைகள் ஏற்படும்.

மாணவ மாணவிகள்

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மனதை ஒருநிலை படுத்தி கவனம் எதிலும் சிதறாமல் இருக்க வேண்டும். மத்தவங்க பேச்சை கேட்டு கொண்டு இருப்பதை விட பெடரவர்களின் பேச்சை கேட்டு நடந்தால் நன்மை உண்டாகும். பெற்றவர்கள் பிள்ளைகள் மீது அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். அவர்களின் நட்பு சேர்க்கை, விளையாட்டு, என்ன செய்கின்றார்கள் போன்றவற்றை கண்காணித்து நல்வழி படுத்துங்கள். வம்பு, வீண் சிக்கல் ஏற்ப்படக்கூடும் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.

உடல் நிலை

உணவு சம்மந்தமாக  கவனமாக இருக்க வேண்டும். நேரம் தவறாம உணவு எடுத்து கொள்ளுங்க. ரத்தம் அழுத்தம், கழிவு உறுப்பு, சிறுநீரக கல், கொழுப்பு  சம்பந்தமாக உபாதைகள் வரக்கூடும். நெருப்பு, மின்சாரம் பணிகள் இருப்பவர்கள் எச்சரிக்குடன் இருக்க வேண்டும்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!