International
மலேசியா

முதுகலை படிப்பு: பூமிபுத்ரா அல்லாதோரை UITM ஏற்க வேண்டும்!- அர்ஷாட் அயூப்

கோலாலம்பூர், ஜன.10- முதுகலை படிப்புகளை தொடர விரும்பும் பூமிபுத்ரா அல்லாதவர்களை, அனைத்துலக இஸ்லாமிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது இயக்குநர் அர்ஷாட் அயூப் அறிவுறுத்தினார்.

முதுகலைப் பட்டப் படிப்பை தொடர விரும்பும் பட்டதாரிகளுக்கு, அந்தப் பல்கலைக்கழகத்தில் இடம் வழங்கினால், அங்கு அதேப் படிப்பினை தொடரும் பூமிபுத்ராகளுக்கு பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் போட்டி கொடுக்கலாம் என்று அவர் கருத்துரைத்தார்.

இருந்த போதிலும், இளங்கலை படிப்பில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுடன் போட்டி போட மலாய் மற்றும் பூமிபுத்ரா மாணவர்களால் தற்போது இயலாது என்று அவர் குறிப்பிட்டார்.

“சுமார் ஐந்து ஆண்டுகால பட்டப் படிப்பிற்கு பின்னர், சில கால பயிற்சிக்கும் பின்னரே அவர்களால், பொறியியல் மற்றும் கணக்காய்வு போன்ற துறைகளில் முதுகலைப் பட்டதாரிகளுடன் போட்டியிட முடியும் என்று நான் நம்புகிறேன்.

இதனிடையில், தற்போது 90 வயதை அடைந்துள்ள அவர், தான் அப்பலைக்கழக இயக்குநராக பணியாற்றிய போது பல பூமிபுத்ரா மாணவர்களுக்கு உதவியதாக தெரிவித்துக் கொண்டார்.

அந்த மாணவர்களில் பலர் புறநகரைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களுக்கு கல்வி வாழ்க்கை குறித்த அனுபவம் குறைவாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

The post முதுகலை படிப்பு: பூமிபுத்ரா அல்லாதோரை UITM ஏற்க வேண்டும்!- அர்ஷாட் அயூப் appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!