International
இந்தியா

மோடி நிச்சயம் தண்டிக்கப்படுவர்.! கூட்டணி கட்சி அதிரடியால் பரபரப்பு.!

மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான சிவசேனா, பாஜகவுடன் மத்தியில் கூட்டணியில் இருக்கிறது. இருப்பினும் பாஜக அரசினை மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், பணமதிப்பிழப்பீடு அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அது பற்றி சிவசேனா கட்சியின் செய்தித்தொடர்பாளர் மனிஷா கயாண்டே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பணமதிப்பிழப்பீடு நடவடிக்கை முழுமையான தோல்வி கண்டா ஒரு திட்டம் என்று கூறினார்.
மேலும், பணமதிப்பிழப்பீடு திட்டம் மூலம், கள்ள நோட்டுகளையும், தீவிரவாதிகளுக்கான நிதியுதவியை தடுக்க உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்து இருந்தது. ஆனால் ஒன்று கூட நடைபெறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பீடு நடவடிக்கை மூலம் வருமான வரி கட்டுவோர் வீதம் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கும் மத்திய நிதி அமைச்சர், இந்த பணமதிப்பிழப்பீடு மூலம் எத்தனை பேர் வேலை இழந்தார்கள் என்பதை சொல்ல மறுக்கிறார் என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.
பணமதிப்பிழப்பீடு அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதனால் உண்டான பாதிப்புகளுக்காக பிரதமர் மோடியை தண்டிக்க மக்கள் காத்துக்கொண்டு இருப்பதாக சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் மனிஷா கயாண்டே தெரிவித்துள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!