International
இலங்கை

வடக்கில் சீமெந்துக் கல் விற்பனையிலும் இறங்கியது இராணுவம்!

முல்லைத்தீவு- முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தை ஆக்கிரமித்து, அங்கு படைத்தலைமையகத்தில் அமைத்து நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், வீடு கட்டுவதற்குப் பயன்படும் சீமெந்து கற்களை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த இராணுவ முகாமிற்கு வெளியே காணப்படும் விளம்பரப்பலகையில் ‘ கல் விற்பனைக்கு உண்டு, ரூபா 32” என்ற விளம்பரம் வைக்கப்பட்டுள்ளதுடன், மாதிரியான கற்களும் அடுங்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான தொலைபேசி இலக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்னி பெருநிலப்பரப்பில் பொதுமக்கள் செய்துவரும் பல்வேறு தொழில்களையும் இராணுவத்தினர் செய்து வருகின்றனர். விவசாயம், பால் பதனிடும் நிலையம், மீன்பிடி, சிறு வணிகம், பெரியளவிலான ஹோட்டல் ஆகிய தொழிற்துறைகளை இராணுவம் ஏற்கனவே நடத்தி வருகின்றது. இந்நிலையில் மக்களின் குடிசைக் கைத்தொழிலாக இருந்து வரும் கற்கள் செய்து விற்பனை செய்யும் தொழிலையும் இராணுவம் கையிலெடுத்திருக்கின்றமையானது மக்களின் எஞ்சியிருக்கின்ற தொழில் முயற்சிகளையும் அபகரிக்கும் நோக்கம் கொண்டது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!