International
அழகு

கண்ணில் ஏற்படும் கருவளையத்தை சரி செய்ய விளக்கெண்னெயை பயன்படுத்தும் முறை!

இரவில் சரியாக தூங்காமல் இருக்கும் போதும் சரி,  தொலைபேசியில் நேரம் செலவிடுவது என பலவிதமான காரணங்களால் கருவளையம் உருவாகிறது. அப்படி ஏற்படும் கண்ணில் உள்ள  கருவளையத்தை மறைக்க விளக்கெண்ணெயை பயன்படுத்தும் வழிமுறைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.

கண்ணில் ஏற்படும் கருவளையத்தை சரி செய்ய விளக்கெண்னெயை பயன்படுத்தும் முறை:-
  • கற்றாழை ஜெல்லை விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவினால் போதும் கருவளையம் உடனடியாக நீங்கும்.
  • விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து குளித்து வர கருவளையம் சரி ஆகும்.
  • விளக்கெண்ணெய் மற்றும் பாலை நன்றாக கலக்கி கண்களில் உள்ள கருவளையங்களில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் போதும் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும்.
  • விளக்கெண்ணெய் மற்றும் உருளைக்கிழங்கின் சாறு சேர்த்து தடவினால் கருவளையம் வெகு விரைவில் குணமாகும்.
  • இரவு தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து தடவ வேண்டும். காலையில் மீண்டும் குளித்து வர கருவளையம் மறையும்.
share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!