International
அழகு

சரும ஆரோக்கியத்திற்கு தயிர் மட்டும் போதுமா?

தயிர் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லை சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். சருமத்திற்கு தயிரை பயன்படுத்தும் வழிமுறைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.

  • 100 கிராம் அளவுள்ள தயிரை முகத்தில் பயன்படுத்தினால் அதில் உள்ள ஆஸ்ட்ரினண் எனும் பொருள் சரும செல்களின் வளர்ச்சியை அதிகரித்து கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் வராமல் பார்த்து கொள்ள முடியும்.
  • தயிரில் உள்ள கால்சியம் சத்துகள் சருமத்தில் தடவுவதன் மூலம் சரும வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. மேலும் தயிர் நமது சருமத்திற்கு தேவையான ஈரப்பசையை அளிக்கிறது.
  • தயிரில் உள்ள லேட்டிக் ஆசிட் சருமத்தில் சிறந்த மாய்ச்சுரைசராக செயல்பட்டு சரும சுருக்கம் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது.
  • வெளியில் சுற்றி திரிவதால் ஏற்படும் சரும களைப்பை போக்க தயிரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் சரும்ம் புத்துணர்ச்சியாக இருக்கும்.
  • தயிரை தினமும் முகத்தில் தடவி பேஸ் மாஸ்க் செய்தால் முகத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற உதவுகிறது.
share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!