International
அழகு

தக்காளியை கொண்டு முகத்தை எப்படி அழகுபடுத்தலாம்

தக்காளியின் சாற்றை முகத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வர முகத்தில் எவ்வித சுருக்கங்களும் வராமல் தடுக்கலாம், பருக்கள் வராமல் பாதுகாத்துக்கொள்ளும்.

தக்காளி சாற்றுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள், கடலை மாவும் சேர்த்து உபயோகிக்க நல்ல பொலிவு கிடைக்கும், இதை தினமும் செய்து வர நிறம் மாறுவதை காணலாம்.

முகத்தில் உள்ள தழும்புகளை மறைக்க இதை பயன்படுத்துங்கள். எண்ணெய் கசடு போகவும் தக்காளி  சாறு உதவுகிறது.

தக்காளி சாற்றுடன் வேப்பிலை சாற்றையும் கலந்து பூச முகத்தின் கருமை மறைந்து சிவப்பாக மாறும், பால் கலந்தும் பயன்படுத்தி பாருங்கள் நல்ல பலனை பெறலாம்.

இச்சாற்றை கண்களுக்கு கீழ் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய கருவளையம் நீங்கி விடும். இதை கண்களை சுற்றி தொடர்ந்து உபயோகியுங்கள் அழகான கண்களை பெறுவீர்கள்.

சூரியனிடம் இருந்து வரக்கூடிய கதிர்களால் ஏற்படும் நிற மாற்றத்திற்கு உகந்தது. அதிக வெப்பம் முகத்தில் நேரடியாக தாக்குவதால் நிறத்தை மாற்றும். தக்காளியை பயன்படுத்தி நல்ல சிவப்பழகை பெறுங்கள்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!