International
ஆரோக்கியம்

அதிகமாக கோபப்படும் பெண்களா நீங்கள்?

அதிகமாக கோபப்படும் பெண்களுக்கு எந்த குழந்தை பிறக்கும் என சமீபத்தில் நியூசாலந்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட பெண்களிடம் உடல் மட்டும் மனதளவிலான பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

அப்போது பல சுவாரஸ்யமான முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் பங்குபெற்ற பெண்கள் மத்தியில் கண்டறிந்துள்ளனர். நாகரீகம் வளர்ந்துவிட்டாலும், இந்தியாவின் பல குடும்பங்கள் ஆண் குழந்தையை தான் அதிகம் விரும்புகின்றன.

இந்தியாவில் மட்டுமில்ல, உலகளவில் ஆண் குழந்தை விரும்பு குடும்பங்கள் அதிகளவில் உள்ளன. இதை முன்னிட்டு தான், நியூசாலந்தில் பெண்களுக்கு இந்த ஆய்வை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.

அப்போது, அதிகமாக கோப்பப்படும் பெண்களின் கருப்பையில் டெஸ்டோடீரோன் என்ற ஹார்மோன்கள் அதிகம் சுரப்பது தெரியவந்துள்ளது. ஆண் தன்மையை உடலுக்கு கொண்டு வரும் இந்த ஹார்மோன்கள், அதிகமாக ஆக்ரோஷம் கொள்ளும் பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பை ஏற்படுத்திவிடுகிறது.

பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று நிர்ணயிப்பதில் ஆண்களின் உயிரணுவில் ’எக்ஸ்’ குரோமோசம் பெண் குழந்தையும், ’ஒய்’ குரமோசோமால் ஆண் குழந்தையும் உருவாகிறது. கருப்பையில் டெஸ்ட்டோஸ்டீரோன் ஹார்மோன் அதிகமிருந்தால் “Y” குரோமோசோம் கொண்ட உயிரணுவினால் தான் பெண்ணின் கருமுட்டையை எளிதில் அடைய முடிகிறது. இதனால் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இயற்கையிலேயே இந்த குணநலன்களைப் பெற்றுள்ள பெண்களுக்குத்தான் இந்த ஆய்வு முடிவுகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!