International
ஆரோக்கியம்

இந்த ஒரு செடி மருத்துவமனையை மறக்கவைக்கும்!.

கடுமையான வறட்சியான காலத்திலும் கூட செழித்து வளரக் கூடிய ஒரு மருத்துவ தாவரமாக ஆவாரம் காணப்படுகின்றது. இந்த செடியின் அணைத்து பாகங்களும் மனிதனுக்கு இன்றியமையாத மருத்துவமாகும்.

ஆவாரம் செடியினுடைய இலை, பூ, காய், பட்டை, வேர் என அணைத்து பாகங்களுமே மருந்தாகப் பயன்படும். ஆவாரம்பூவில் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அடங்கியுள்ளன. மேலும் அதில் பல வேதிப் பொருள்கள் நிறைந்துள்ளன.

ஆவாரம் பல்வேறு நோய்களுக்கு முக்கிய மருந்தாக அமைகிறது. தினமும் இரண்டு வேளை ஆவாரம்பூ டீ போட்டு குடித்துவந்தால் மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் ஆவாரம்பூ சாப்பிட்டுவந்தால் இரண்டு மாதங்களில் சர்க்கரை குறையும்.

ஆவாரம் பட்டையை தண்ணீரில் கொதிக்கவைத்து காய்ச்ச வேண்டும். அந்த நீரை ஆறவைத்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வந்தால் சிறுநீரில் ரத்தம் கசிதல், சர்க்கரை போன்ற பிரச்சினை பறந்துவிடும்.

ஆவாரம்பூவை உலர வைத்து பொடி செய்து, குளிக்கும்போது மேனிக்குப் பயன்படுத்தலாம். இதனால் உடலில் ரத்தம் சுத்தமடையும். அதோடு மேனியும் பளபளப்பாக மாறிவிடும். மேலும், ஆவாரம்பூ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் சாப்பிட்டுவந்தால் உடல்சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, போன்ற பிரச்சினை நீங்கும்.


Post Views:
4

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!