இயற்கையும் நம்மை நோயிலிருந்து காக்கின்றது…!

இயற்கை நம்முடன் எப்பவும் பயணிக்கும் ஒரு அருமருந்து. அத்தகைய இயற்கையில் கடல், மலை என்று எங்கு சென்றாலும் ஒருவித மென்மையான மனநிலை தோன்றும் புத்துணர்ச்சி கிடைக்கும் அதன் காரணம் குறித்து நாம் ஆராய்ந்தது உண்டா…?
நிச்சயம் இருக்காது ஆனால் சில மாற்றங்கள் நாம் அடைகின்றோம். அது என்ன என்று பார்க்கலாம்
முதலில் மலையேற்றம், மலையேற்றத்தின்போது, நமது உடலின் சுமார் 65 கிலோ எடையை மேல்நோக்கி உந்துவதற்கு அதீத ஆற்றல் தேவைப்படுவதால் உடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை அவசர அவசரமாக வெளியேற்றும். கழிவு நீங்கிய வெற்றிடத்தில் மலைப்பகுதியில் நிலவும் மாசில்லாக் காற்றும் மரங்களின் பசுமை நிரம்பிய ஆக்சிஜன் வெகு வேகமாக நிரப்பப்படும்.
காய்ச்சல் எற்பட்டு பழைய செல்களும் கழிவுகளும் எரிக்கப்பட்டுக் புதிய உடலைப் பெறுகிறோம். ஆனால், காய்ச்சலில் இருந்து மீண்டெழுந்த ஓரிரு வாரங்களுக்குப் பின்னரே உடல் பழைய ஆற்றலைக் காட்டிலும் கூடுதலான ஊக்கத்துடன் இயங்கும். அதிலிருந்து சற்று மாறுபட்டு, மலையேற்றத்தினால் ஆற்றல் நிறைந்த புதிய உடலை ஓரிரு நாட்களிலேயே பெற்றுவிட முடியும்.
அடுத்தது கடல்காற்று, கடற்காற்றுச் சுவாசத்தின் மூலமாக நமது உடலுக்குத் தேவையான ரசாயனக் கூறுகள் உடலினுள் நிரப்பப்படும். உடலின் இயக்கம் விரைவுபடுவதோடு தோலின் நிறமும் புதுபொலிவு பெறும்.
காலையில் உயிராற்றல் நிரம்பிய நான்கரை, ஐந்து மணி சுமாருக்கு 10 -20 நிமிடங்கள் மூச்சிரைக்க மெதுவாக கடற்கரையில் ஓடிவிட்டு, கடற்கரை மணற்பரப்பில் உடலைத் தளர்வாக செய்து படுக்க வேண்டும், சுமார் ஒரு மணிநேரம் நிதானமாக மூச்சை வெளிவிட்டு அதே அளவுக்கு நிதானமாக உள்ளிழுக்க வேண்டும்.
மூச்சை நிதானமாக வெளியேற்றும் உள்ளிழுத்தல் இரண்டையும் சம கால அளவை கொண்டுவருவதற்கான முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அதற்காக உள்ளிழுக்கும் நேரத்தை விரைவுபடுத்தி விடக் கூடாது.
