Sun. Nov 29th, 2020

கொரோனா வைரஸ் ஆனது, இன்று வரை அதன் தாக்கம் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது. இதுவரை உரிய மருந்தை கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகளும் திணறிகொண்டு தான் இருக்கிறது.

இதையடுத்து, வைரஸ் பரவுவதை தடுக்க கட்டாயம் முககவசம் அணிவதும், கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என எச்சரித்து வருகின்றனர்.

மேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் எதிர்ப்பு சக்தி உணவுகளை சாப்பிட வேண்டும் எனவும், கபசுர குடிநீரையும் பருகலாம் எனவும் கூறியுள்ளனர்.

கபசுரக் குடிநீர் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாக கருதப்படும் கபசுரக் குடிநீர் சளி, காய்ச்சல், களைப்பு, உடல் வலி ஆகியவற்றை போக்கும் திறன் கொண்டது.

நாட்டு மருந்து கடைகளில்: 1. ஆடாதொடை இலை, 2. சிறு தேக்கு, 3. கரிசலாங்கண்ணி, 4. சுக்கு, 5. திப்பிலி, 6. சிறுகாஞ்சேரி வேர், 7. அக்ரகாரம், 8. முள்ளி வேர், 9.

கற்பூர வள்ளி இலை, 10. கோஷ்டம், 11. சீந்தில் தண்டு, 12. நிலவேம்பு சமூலம், 13. வட்ட திருப்பி வேர், 14. கோரைக்கிழங்கு, 15. கடுக்காய் தோல் ஆகிய மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் கொண்டு இந்த கபசுரக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது.

இதையடுத்து, நாட்டு மருந்து கடைகளில் இது பொடியாகவும் கிடைக்கும். நிலவேம்பு கஷாயம் செய்வது போலவே கொதிக்கவைத்து சுண்டிய பிறகு வடிகட்டிக் குடிக்கலாம்.

மேலும், குழந்தைகளுக்கு 15 மில்லி லிட்டர் கஷாயத்தில் தேன் கலந்து ஒரு ஸ்பூன் தினமும் கொடுத்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

பெரியவர்கள் ஒருவேளைக்கு 30 மில்லி குடிக்கலாம். கர்ப்பிணிகள் கபசுரக் குடிநீரைத் தவிர்ப்பது நல்லது.

சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

share

By Editor

error: Alert: Content is protected !!