Sun. Nov 29th, 2020

காலையில் எழுந்ததும் சில பேருக்கு ஒரு கப் காபி குடிக்கவில்லை என்றால் எந்த வேலையும் ஓடாது என்பார்கள்.

அன்றாட வேலைகளை செய்யும் போது சோம்பேறித்தனமாக இருக்கும் என சொல்பவர்கள் உண்டு. எனவே இதுவரை காபி தான் நிறைய பேர்களில் எனர்ஜி பூஸ்டராக இருந்து வந்தது.

ஆனால் உண்மையில் காபியை விட நம்மளை வேகமாக சுறுசுறுப்பாக்கும் பழங்களும் உள்ளனவாம். எனவே நீங்கள் சுறுசுறுப்பாக வேகமாக செயல்பட இந்த பழங்களில் சில துண்டுகளை சாப்பிட்டாலே போதும்.

காபிக்கு பதிலாக ஒரு பெரிய பளபளப்பான ஆப்பிள் உங்களுக்கு சுகாதார நன்மைகளை வழங்குவதோடு காலையில் எழுந்து சுறுசுறுப்பாக செயல்படவும் உதவுகிறது.

ஏன் நீங்கள் உடற்பயிற்சி செய்ய புறப்பட்டால் கூட காபி கப்பை தள்ளி வைத்து விட்டு ஆப்பிளை சாப்பிடுங்கள். ஏனெனில் உங்களுக்கு தேவையான எனர்ஜியை அது கொடுக்கும்.

ஆப்பிளின் ஆரோக்கிய நன்மைகள்
  • ஆப்பிளில் சுமார் 10 கிராம் பிரக்டோஸ் என்ற அளவு இயற்கை சர்க்கரை உள்ளது. இது காலையில் உங்களுக்கு தேவையான ஆற்றலை தருகிறது.
  • ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உங்கள் குடல் இயக்கத்தைத் தூண்டவும் மற்றும் நிம்மதியாக இருக்கவும் உதவி செய்யும்.
  • இந்த பழத்தின் தோலில் கூட நார்ச்சத்துக்கள், பெக்டின் சத்துக்கள் நிறைந்து உள்ளன. செரிமான பிரச்சினைகளை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு இது ஒரு சிறந்த உணவாகும்.
  • வெறும் ஒரு கப் காபியை குடித்துக் கொண்டு உங்க நாளை நீங்கள் தொடங்கினால் விரைவில் ஆற்றலை இழந்து விட வாய்ப்பு உள்ளது.
  • காரணம் காபிலிருந்து நீங்கள் பெறப்படும் ஆற்றலானது உடனடி நரம்புத் தூண்டல்களால் மட்டுமே நிகழ்கிறது.
  • ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு 116 கலோரிகளைக் கொடுக்கிறது மற்றும் நீண்ட நேரத்திற்கு இது உங்களுக்கு ஆற்றலை கொடுக்கும்.
  • எனவே நீங்கள் உற்சாகம் இழக்கும் போதெல்லாம் இடை இடையே காபியை நாட வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
  • ஆப்பிளின் தோலில் உள்ள ஜீரணிக்கக்கூடிய நார்ச்சத்துக்கள் உங்க பசியை போக்கும். வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. எனவே நீங்கள் அடிக்கடி உணவை நாடிச் செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
  • எனவே இனி உங்க நாளை தொடங்க காலையில் எழுந்ததும் ஒரு ஆப்பிளை கையில் எடுங்கள் போதும். அந்த நாள் நன்றாக இருக்கும்.

share

By Editor

error: Alert: Content is protected !!