International
ஆரோக்கியம்

மாரடைப்பு ஒருமுறை வந்தபின் என்ன உணவு சாப்பிடலாம்?

பல நூற்றாண்டுகளாக மனித இனத்தை அச்சுறுத்தி வைத்துக்கொண்டிருக்கும் ஒரு நோய் மாரடைப்பு.

முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும்தான் மாரடைப்பு ஏற்படும் ஆனால் தற்போதுள்ள உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் மன அழுத்தம் நிறைந்த சமூகத்தில் மாரடைப்பு என்பது 30 வயதிலேயே ஏற்பட தொடங்கிவிட்டது.

உணவு பழக்கவழக்கம், வேலைச்சுமை, முன்னோர்கள் மூலம் என மாரடைப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளது.

இதயம் மிக முக்கிய உறுப்பாக நமது உடலில் கருதப்படுகிறது. இதயத்தின் செயல்திறன் குறைந்து கொண்டே போனால், கடைசியில் மரணம் தான் நேரும்.

ஆரோக்கியமான உணவுகள் உங்களை மாரடைப்பில் இருந்து காப்பாற்றுகிறது என்றே கூறலாம்.

பூண்டு

இதய ஆரோக்கியத்தை காப்பாத்தில் பூண்டிற்கு முக்கிய பங்கு உள்ளது. இதில் அல்லிசின்(allicin) எனப்படும் முக்கிய மூல பொருள் உள்ளது. இவை ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவும். குறிப்பாக anti-carcinogenic தன்மை அதிகம் நிறைத்துள்ளதாக ஆய்வுகள் சொல்கிறது. எனவே, மாரடைப்புகளை பூண்டு தடுக்கும்.

ஆரஞ்ச்

ஆரஞ்சை அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம். குறிப்பாக கொலெஸ்ட்ரோலின் அளவை இது கட்டுக்குள் வைக்குமாம். இவை இதயத்தில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால் அதனையும் சரி செய்து விடுமாம்.

மாதுளை

இதயத்தின் நலனை அக்கறையுடன் பார்த்து கொள்கிறது மாதுளை. இவை ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் இதில் இருப்பதால் எதிர்ப்பு சக்தியை கூட்டி மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.

பருப்பு வகைகள்

22 சதவீதம் இதய கோளாறுகளை தடுப்பதில் இந்த பருப்பு வகைகள் முதன்மையான இடத்தில் உள்ளது. பீன்ஸ், பச்சை பட்டாணி போன்றவை ஆரோக்கியமான உணவு வகைகளை சார்ந்ததாகும். எனவே, இது போன்ற காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டு இதய ஆரோக்கியத்தை காத்து வாருங்கள்.

ஆரோக்கியமான உணவுகள்

தீய கொலஸ்ட்ரால், ஃபாஸ்ட்புட், எண்ணெயில் வறுத்த உணவுகள், அதிக கொழுப்பு உள்ள உணவுகள் போன்றவற்றை தவிர்த்து, இதயதிற்கு வலு சேர்க்கும் உணவுகளை அதிகம் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி

குறைந்தபட்சம் தினமும் 30 நிமிடங்களாவது காலை – மாலை நடைப்பயிற்சி , ரன்னிங் அல்லது சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது உங்கள் உடலின் அளவுக்கு அதிகமான எடையை குறைக்கவும், இதய நோய் ஏற்படும் விகிதத்தை குறைக்கவும் உதவும்.

இரத்த சர்க்கரை அளவு

ஒருவேளை உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், அதற்கான மருந்துகளை சரியாக எடுத்து வர வேண்டும். இரத்த சர்க்கரை அளவு அதிகமானால், இதன் காரணமாக இதய நோய் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

எச்சரிக்கை

புகைப்பழக்கம், குடி போன்ற பழக்கங்களில் இருந்து வெளியே வாருங்கள். இதனால், இன்னும் இதய நோய் பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அமையும். போதை பழக்கம் கூடவே கூடாது. கொழுப்பு அதிகம் சாப்பிடுபவர்களாக இருந்தால் உடனே நிறுத்துங்கள். இல்லை உயிரை எமன் போல பறித்து விடும்.


Post Views:
7

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!