International
ஆரோக்கியம்

முகத்தில் வரும் சிறு சிறு பொரிகளை போக்க வேண்டுமா?

பொதுவாக சிலருக்கு வெயில் காலத்தில் முகத்தில் சிறு சிறு பொரிகளும் வேர்குரு போன்றவை அடிக்கடி வரும்.

மேலும் இதற்கு காரணம் முகத்தில் படும் முடிக்கற்றைகளால் உண்டாகும் அலர்ஜிதான்.

அதுமட்டுமின்றி கூந்தலின் கடினம் சருமத்தில் பாதிப்பேற்பட்டு இது போல் தோன்றுகிறது எனவும் சொல்லப்படுகின்றது.

இதற்கு இயற்கையான எளிய தீர்வுகள் உண்டு. அது என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையானவை
  • கசகசா – 2 டீஸ்பூன்
  • துளசி இலை – 10
செய்முறை

இவ்விரண்டையும் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு பருத்தி துணியினை குளிர்ந்த நீரில் முக்கி பிழிந்து அதனை முகத்தில் போடுங்கள்.

அதன் மீது இந்த கலவையை பற்று போல் போடுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் பலன் தெரியும். வாரம் ஒருமுறை செய்து பாருங்கள்.

துணியில்லாமலும் முகத்தில் போடலாம். ஆனால் அதன் சாறு எளிதில் வழிந்துவிடும். அதற்காகத்தான் துணியில் போட்டால் எளிதில் சருமம் உறிஞ்சிக் கொள்ளும்.

இதில் சேர்க்கப்பட்டுள்ள கசகசா பொரிகளை அடியோடு போக்குவதுடன், முகத்தையும் வழுவழுப்பாக்கும். துளசி, தோலின் முரட்டுத் தன்மையை நீக்கி மிருதுவாக்கும்.

இவ்வாறு செய்வதனால் முகத்தில் சிறு சிறு பொரிகள் வேர்குரு போன்றவற்றை நீக்கி முகம் இயற்காகவே பொழிவு பெறுகின்றது.


Post Views:
23

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!