International
ஆரோக்கியம்

முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய சமையல் அறை குறிப்புகள்.!!

நாம என்னதான் சமையலில் பெரிய கில்லாடிகளாக இருந்தாலும் ஒரு சில சமல் குறிப்புகள் நமக்கு தெரியாமலே போகலாம். பொதுவாகவே இன்றைய சூழலில் சமையல் அறைக்கு ஆண்களின் வருகை அதிகமாகியுள்ளது. எனவே இல்லத்து அரசிகளின் அரசர்களும் இந்த சமையல் குறிப்புகளை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

* ரவையை மாவாக்கி அதில் வெல்லப்பாகு விட்டு தேங்காய்த்துருவலை சேர்த்து பிசைந்து கொழுக்கட்டையாக செய்து வேகவைத்து எடுத்தால் ருசியுள்ள கொழுக்கட்டை தயார்.

* சுண்டல் செய்த பிறகு அதன் மேல் காராபூந்தியை தூவி சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

* தேன்குழல் செய்யும்போது உருளைக் கிழங்கை வேகவைத்துச் சேர்த்தால் சுவையும் மொறுமொறுப்பும் கூடும்.

* முறுக்குக்கு திரித்த மாவு என்றால் மொத்தமாகப் பிசையாமல் கொஞ்சம் கொஞ்சமாக பிசைந்து செய்தால் மாவும் உலராது. முறுக்கும் கருக்காது.

* சூடான கேக்கை கத்தியினால் நறுக்கினால் நீட்டாக வில்லைகள் போட வராது. ஒரு மெல்லிய நூலால் அறுத்தால் அழகாக துண்டங்கள் விழும்.

*நான்ஸ்டிக் தோசைக்கல்லை ஒரு போதும் நேரடியாக அடுப்பில் சூடு செய்யக்கூடாது. அப்படி செய்தால் நான்ஸ்டிக் கோட்டிங் சீக்கிரமாக போய் விடும். உடலுக்கும் கெடுதல், சிறிது எண்ணெய்த் தடவிதான் சூடாக்க வேண்டும்.

*உளுந்து வடை செய்யும்போது மாவில் சிறிதளவு சேமியாைவத் தூள் செய்து போட்டுக் கலந்தால் சுவையாக இருக்கும்.

* அப்பளம் பொரிக்கப் போகிறீர்களா? பொரித்து முடித்ததும் சூட்டோடு சூடாக சிறிது எவர்சில்வர் பாத்திரத்தில் வைத்து அதன் ஓரங்களை அழுத்தி விடுங்கள். சூடு ஆறிய பிறகு பார்த்தால் அப்பளம் அந்தப் பாத்திரத்தின் வடிவில் பார்ப்பதற்கு புதுமையாக காட்சியளிக்கும்.

* டேபிள் சால்ட் கெட்டியாக பாறை போல் உலர்ந்து விடாமல் தடுக்க ஒரு சிட்டிகை பச்சரிசியை அதில் போட்டு குலுக்கி வைக்கலாம்.

* பலா இலையை உபயோகித்து இட்லி, இடியாப்பம் போன்றவை செய்தால் புது வாசனையுடன் சுவையான பலகாரம் ரெடி.

* கீரை மற்றும் வெஜிடபிள் கட்லெட் செய்யும்போது சிறிதளவு சாதத்தை நன்கு மசித்து சேர்த்துப் பிசைந்து உருட்டி கட்லெட் செய்து பாருங்கள். கட்லெட் மிருதுவாகவும், நன்றாகவும் இருக்கும்.


Post Views:
21

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!