- கேப்பை மாவை தண்ணீரில் நன்கு கரைத்து அதனுடன் உப்பு கொஞ்சம் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கிளற வேண்டும்.இதை தினம் செய்து சாப்பிட்டால் மூட்டு வலி,உடம்பு வலி இருக்காது.வயதான பிறகு உடம்பில் எந்த விதமான வலிகளும் வராது.
- இதை காலை உணவாக எடுத்து கொள்ளலாம்.
- உடல் பருமனாக இருப்பவர்கள் இதையும் டயட் உணவாக எடுத்து கொள்ளலாம்.
- கேப்பை மாவு மிகவும் சத்தானது சாப்பிடுங்கள் சாப்பிட்டு ரத்த சோகையில் இருந்து விடுபடுங்கள்.
- கேப்பை மாவில் பச்சை வாசனை போக வேண்டும் இல்லையென்றால் அது நமக்கு வயிற்று போக்கை ஏற்படுத்தி உடல் சோர்வை ஏற்படுத்திவிடும்.
- இதை வைத்து புட்டு,தோசை சமைத்து சாப்பிடலாம்
- இது உடம்பில் ஏற்படும் சூட்டை தணிக்கும் பொருட்களில் ஒன்று.
- ஆனால் இது எல்லோருக்கும் உடனே ஒத்துக்கொள்ளாது சாப்பிட சாப்பிடத்தான் சரி ஆகும்.