International
உணவு

சங்கரா மீன் வறுவல்

சங்கரா மீன் – 500 கிராம்,
மிளகாய்த்தூள் – 1½ டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 3 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்,
சோம்புத்தூள் – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 2 கொத்து,
எலுமிச்சைச்சாறு – 1 பழம்,
அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – 150 மி.லி.,
உப்பு – தேவைக்கு.

மீனை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். மற்ற மசாலா பொடிகளை சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, மீனில் தடவி 15 நிமிடம் ஊறவைக்கவும். ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீனை போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பிறகு வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் எலுமிச்சைப் பழத்தால் அலங்கரித்து பரிமாறவும்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!