International
உணவு

ஜிஞ்சர் மஷ்ரூம்

காளான் – 100 கிராம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1,
பூண்டு, ஸ்ப்ரிங் ஆனியன் – தலா 1 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி – 3 டேபிள்ஸ்பூன்,
மைதா, சோள மாவு – தலா 25 கிராம்,
எண்ணெய், உப்பு, வெள்ளை மிளகுத்தூள் – தேவைக்கு,
சோயா சாஸ் – சிறிது

காளானை நான்கு துண்டுகளாக நறுக்கி, சோள மாவு, மைதா, உப்பு, வெள்ளை மிளகுத்தூள் கலந்து, சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து சூடான எண்ணெயில் வறுத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து இஞ்சி, பூண்டு, வெங்காயம் வதக்கி, உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சோயா சாஸ், வறுத்த காளானை சேர்த்து கிளறி இறக்கவும். ஸ்ப்ரிங் ஆனியன் தூவி சூடாக பரிமாறவும்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!