International
உணவு

பச்சரிசிக்களி

தேவையான பொருட்கள்

பச்சரிசி / பொங்கல் அரிசி – 500g
தேங்காய்ப்பால் – 2 கப்
கற்கண்டு – 250g
ஏலக்காய்த்தூள் தண்ணீர்- தேவைக்கேற்ப
உப்பு – சிறிதளவு

செய்முறை

அரிசியை நீரில் 2 மணிநேரம் ஊறவிடவும்.

ஊறியதும் உரலில் அல்லது மிக்ஸியில் இட்டு நன்றாக மாவாக்கவும்.

மாவில் சிறிது உப்பு சேர்த்து 1 1/2 கப் தேங்காய்ப்பால் விட்டு நன்கு கரைக்கவும்.

அடுப்பில் சட்டியை வைத்து சூடானதும் , கலவையை ஊற்றி நன்கு கிளறவும்.

பாதி வெந்ததும் கற்கண்டு சேர்த்து நன்கு கிளறவும்.

அத்துடன் மீதிப்பாலையையும் சேர்த்து நன்கு அடிப்பிடிக்காமல் கிளறவும்.

நன்றாக வெந்ததும் சிறிது ஏலக்காய்த்தூள்
சேர்த்து இறக்கவும்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!