International
உணவு

மஸ்கோத் அல்வா

மைதா மாவு – ¾ கப்
தடித்த தேங்காய் பால் – 4 கப்
சர்க்கரை – 1¼ கப் + ¼ கப்
முந்திரி – 3 டேபிள் ஸ்பூன்

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கெட்டியாக பிசைந்து வைக்கவும். இந்த மாவில் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர் மைதா மாவை தண்ணீரில் கரைத்து வடிக்கட்டி கொண்டு தண்ணீரை பிரித்து எடுக்கவும். இந்த தண்ணீரை மூடி 2 மணி நேரம் அப்படியே விடவும். பின் தெளிவான நீர் மேலே நிற்கும், கெட்டியான மைதா பால் அடியில் தங்கியிருக்கும். தண்ணீரை வடிகட்டி, மைதா பாலை ஒரு கடாயில் எடுக்கவும்.

இப்போது அதனுடன் தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து தடித்து வரும் வரை கிளறவும். மற்றெரு பாத்திரத்தில் சர்க்கரை எடுத்து அதை நன்றாக சூடாக்கினால், கேரமல் உருவாகும். அவற்றை மீதமான தீயில் வெந்து கொண்டிருக்கும் அல்வாவில் ஊற்றி கிளறவும். எண்ணெய் பிரியும் வரை கிளறி முந்திரி சேர்த்து இறக்கவும். ஒரு பத்திரத்தில் நெய் தடவி அதில் அல்வாவை கொட்டி, வேண்டும் வடிவில் வெட்டி எடுத்து பரிமாறவும்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!