International
உணவு

மூட்டுவலியால் அவஸ்தைபடுகிறீர்களா? அதை தடுக்க சில எளிய வழிகள்!

பெரும்பாலும் வயதானவர்களை பாடுபடுத்தக்கூடிய ஒரு நோய் மூட்டுவலி மட்டும் தான். அவர்கள் நடக்கும் போது மூட்டுக்கு மேலேயும், எலும்பு பகுதிகளிலும் வலி ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கான சில எளிய வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

மூட்டுவலியை சரி செய்ய உதவும் உணவுகள்:-

  • இஞ்சி மற்றும் எலுமிச்சை கலந்த சாற்றினை கொதிக்க வைத்து சிறிது தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும்.
  • நீரில் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து மூட்டியில் நீரை தடவி எடுப்பதன் மூலம் மூட்டுவலியை உடனடியாக குறைக்க முடியும்.
  • ஆப்பிள் சீடர் வினிகரை சிறிதளவு பருகி வர மூட்டி வலிக்கு சிறந்த நிவாரணியாக உதவுகிறது. இது மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கிறது.
  • எள்ளை அதிக அளவில் உணவில் சேர்த்து கொண்டால் அதில் உள்ள கால்சியம் மூட்டுவலி ஏற்படாமல் பார்த்து கொள்ள முடியும்.
  • வயதானால் உடலில் எலும்புகளின் ஆரோக்கியம் குறைய ஆரம்பிக்கும். எனவே அடிக்கடி மருத்துவரை சந்தித்து வைட்டமின் மற்றும் கால்சியம் மாத்திரைகளை சாப்பிட வேண்டும்.
  • ஆர்த்ரைடிஸ் மூட்டு வலி மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் அழற்சி, போன்றவற்றை குணமாக்க பப்பாளி விதை ஒரு அற்புத மருந்தாக உதவுகிறது.
share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!