வாஸ்து படி வீட்டில் பணம் தங்க என்ன செய்ய வேண்டும்!

வீட்டில் எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும் சரி செலவு தான் அதிகமாகிறது என்று சொல்பவரா நீங்கள் அப்படியெனில் இந்த பதிவு உங்களுக்கு தான். வீட்டில் செலவு அதிகரிக்கும் போது வீட்டையே மாற்றி விடலாம் என்று தோணும். வாடகை வீடாக இருந்தால் மாற்றி விடலாம் மாறாக சொந்த வீடாக இருந்தால் சில மாற்றங்களை செய்தால் போதுமானது. அதை பற்றி இப்போது பார்க்கலாம்.
வாஸ்து படி வீட்டில் பணம் தங்க என்ன செய்ய வேண்டியவை:-
- வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் பகுதி பூஜை அறை மட்டுமே. எனவே பூஜை அறை சரியான திசையில் அமைய வேண்டும். இரண்டு சாமி சிலைகள் எதிரெதிராக இருக்கும் படி அமையக் கூடாது. அப்படி அமைவது செலவுகள் அதிகரித்து வருமானம் குறையும்.
- உடைந்த கண்ணாடி, உடைந்த சாமி சிலைகள், கிழிந்த புகைப் படங்கள் போன்றவற்றை வீட்டில் வைத்திருந்தால் பொருளாதார சிக்கல் ஏற்படும்.
- வீட்டில் சிலர் அழகு என நினைத்து முள் செடிகளை வளர்ப்பர் அது வீட்டில் பணப் பற்றாக்குறையை ஏற்படுத்தும். மாறாக வீட்டிற்கு வெளிப்பகுதியில் வளர்க்கலாம்.
- வீட்டில் தேவையில்லாமலோ அல்லது உபயோகபடுத்தாமலோ வைத்திருக்க கூடிய பொருள்களை வீட்டில் உள்ள பரனில் வைப்பதற்கு பதிலாக வெளியேற்றிவிடுவது நல்லது. ஏனெனில் இவை எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தி பணக் கஷ்டத்தை ஏற்படுத்தும்.
