International
உணவு

விட்டமின் குறைபாட்டை சரிசெய்ய உதவும் பழங்கள் மற்றும் உணவுகள்!

உடலின் சீரான செயல்பாட்டிற்கு அதிக அளவிலான விட்டமின்கள் தேவைப்படுகின்றன. ஆனால் இதில் குறைபாடு ஏற்பட்டால் உடல் சோர்ந்து காணப்படும். இந்த குறைபாட்டை சரி செய்ய உதவும் சில உணவுகளை பற்றி இப்போது பார்க்கலாம்.

விட்டமின் குறைபாட்டை சரிசெய்ய உதவும் பழங்கள் மற்றும் உணவுகள்:-

  • உருளைக் கிழங்கை தோலுடன் சமைக்கும் போது அதன் சத்து இரட்டிப்பாகிறது. விட்டமின் சி, பி, கால்சியம் போன்ற சத்துகள் உருளைக் கிழங்கில் உள்ளது.
  • கீரைகளில் அதிகப்படியான விட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் உள்ளன. குறிப்பாக அகத்தி கீரை, பசலைக்கீரையில் அதிகமான விட்டமின் உள்ளது.
  • காலே எனப்படும் உணவு வகையானது அதிக அளவிலான விட்டமின் – சி யை கொண்டுள்ளது.
  • மாம்பழத்தில் விட்டமின் ஏ, பி6, மினரல்ஸ்கள், கலோரிகள் அதிக அளவில் அடங்கியுள்ளன. இதை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கிறது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். சருமம் அழகாகும். கண் பார்வை தெளிவாகும்.
  • கொய்யாப் பழத்தில் அதிக அளவிலான விட்டமின் – சி அடங்கியுள்ளன. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமை அடையும்.
share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!