International
உணவு

ஹாங்காங் ஃப்ரைடு இறால்

தேவையானவை:
இறால் – 200 கிராம்
கார்ன்ஃப்ளார் – 50 கிராம்
மைதா மாவு – 25 கிராம்
முட்டை- 1
உப்பு – தேவையான அளவு
இஞ்சி-பூண்டு விழுது – 10 கிராம்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம்- 50 கிராம்
இடித்த காய்ந்த மிளகாய்ப் பொடி- 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய செலரி இலைகள் – சிறிதளவு
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – 10 கிராம்
எண்ணெய் – தேவையான அளவு
நறுக்கிய வெங்காயத்தாள் – 10 கிராம்
நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2

செய்முறை:
இறாலை நன்கு கழுவி கார்ன்ஃப்ளார், மைதா, முட்டை, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து
10 நிமிடம் ஊறவைக்கவும். இதனை மிதமான சூடுள்ள எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், செலரி, காய்ந்த மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். இதில் பொரித்த இறால், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், வெங்காயத்தாள் தூவிக் கிளறி இறக்கவும்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!