International
சமையல்

ஆரோக்கியம் தரும் ராஜ்மா – ஸ்வீட்கார்ன் சாலட்

குழந்தைகள் முதல் பெரியோர் வரை தினமும் ஏதாவது ஒரு சாலட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று ராஜ்மா, ஸ்வீட்கார்ன் சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ராஜ்மா – 1 கப்,
ஸ்வீட்கார்ன் – 1 கப்,
உப்பு – தேவைக்கு,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன்,
புதினா இலை – சிறிது.

செய்முறை :

ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் வேகவைத்துக் கொள்ளவும்.

ஸ்வீட்கார்னையும் உதிர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேக வைத்த ராஜ்மா, ஸ்வீட்கார்ன், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, புதினா கலந்து பரிமாறவும்.

சூப்பரான சத்தான ராஜ்மா – ஸ்வீட்கார்ன் சாலட் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு
அனுப்பி வையுங்கள்.

Related Tags :

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!