International
சமையல்

உங்களுக்கு உயர் இரத்த கொதிப்பு இருந்தால், இந்த உணவுகளில் இருந்து விலகி இருங்கள்!

Description:

இன்றைய வேகமான வாழ்க்கை முறையின் கசப்பான உண்மை என்னவென்றால் உயர் இரத்த கொதிப்பு நிகழ்வுதான். இது முக்கியமாக ஒரு ஒழுங்கற்ற மற்றும் சமநிலை இல்லாத வாழ்க்கை பாணியினால்தான் வருகிறது, அதனால் இரத்த கொதிப்பு வழக்கத்தை விட அதிகரிக்கிறது மேலும் இந்த நிலை நீண்ட நாட்களுக்கு தொடர்ந்தால் நீங்கள் இதய நோய் வரும் ஆபத்திற்கு அதிகமாக உள்ளாகக்கூடும். உணவுதிட்டத்தின் பழக்கத்தை மாற்றுவதால் ஓரளவிற்கு நீங்கள் உயர் இரத்த கொதிப்பை கட்டுப்படுத்தலாம். நீங்களும் இந்த பிரச்சனையால் போராடிக்கொண்டிருந்தால், பிறகு இன்று உங்கள் உயர் இரத்த கொதிப்பை சிறப்பாக சமாளிக்க நாங்கள் எந்த விஷயங்களை மிகக் குறைவாக சாப்பிடவும் அல்லது முற்றிலும் உண்பதை தவிர்க்க வேண்டும் என்று உங்களுக்கு சொல்கிறோம்.

1) சக்கரை மற்றும் உப்பு

இது விசித்திரமாக ஒலிக்கலாம் ஆனால் இந்த இரண்டு அத்யாவசிய உணவு பொருட்கள் உங்கள் இரத்த அழுத்தத்தை ஒரு இயற்கைக்கு மாறான வழியில் அதிகரிக்கும். நீங்கள் இந்த அபாயத்தை உங்கள் சக்கரை மற்றும் உப்பு உட்கொள்வதை கட்டுப்படுத்துவதால் இதை ஒரு சிறந்த எல்லை வரை குறைக்கலாம். ஒரு ஆரோக்கியமான நபருக்கு ஒரு நாளிற்கு 2300 மில்லிகிராம் சோடியத்திற்கு மேல் தேவையில்லை, ஆனால் சக்கரையை தவிர்ப்பதற்கு பதிலாக, நீங்கள் உங்கள் உணவு திட்டத்தில் அந்த “கூடுதல்” (“எக்ஸ்ட்ரா”) சக்கரையை தவிர்க்க வேண்டும். தினசரி பெண்களுக்கு ஆறு சின்ன தேக்கரண்டி சக்கரை தேவையையும் மேலும் ஆண்களுக்கு ஒன்பது சின்ன கரண்டி அளவையும் தி அமெரிக்கன் ஹார்ட் அஸோசியேஷன் தொகுத்துள்ளது.

2) தொகுக்கப்பட்ட சூப்கள்

தயாராக இருக்கும் தொகுக்கப்பட்ட சூப்களில் அதிக சோடியம் இருப்பதைக் கண்டால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். அதனால் அலமாரியில் வைக்கும் காலம் மற்றும் சூப்களின் பயனை அதிகரிக்க ஆகிய இரண்டிற்காகவும் இது நிறுவனங்களால் செய்யப்படுகிறது. நூடுல்ஸ் மற்றும் காய்கறிகளின் சுவையை அதிகரிக்கவும் உப்பு உதவுகிறது. வீட்டில் சூப் செய்வது மிகவும் எளிது மேலும் நல்ல சுவையாகவும் இருக்கும். அதனால் நீங்கள் கேனில் இருக்கும் சூப்பை நேரம் இன்மையால் வாங்க முற்பட்டாலும், பின் ஒரு குறைந்த சோடியம் இருக்கும் சூப் தயாரிப்பை வாங்குங்கள்.

3) தொகுக்கப்பட்ட தக்காளி பொருட்கள்

நீங்கள் கவனம் செலுத்தினால், வீட்டில் வளர்க்கும் தக்காளியையும் பெரிய ஸ்டோரில் வாங்கிய தக்காளியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சுவை மிகவும் வித்தாயசமாக இருப்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்; வீட்டில் வளர்த்த தக்காளியின் சுவை மிகவும் நன்றாக இருக்கும். சாஸ்செஸ், கெட்ச்அப் போன்ற தக்காளி பொருட்களை நல்ல சுவையாக தயாரிக்க பெரிய அளவிலான தக்காளி பண்ணையில் இருந்து செய்யப்படுகிறது அதற்கு அதிக சோடியம் தேவைப்படுகிறது, மற்றும் இது அதிக இரத்த கொதிப்பு உள்ள மக்களுக்கு மிகவும் தீங்கானது.

4) தொகுக்கப்பட்ட இறைச்சி பொருட்கள்

பேகன், சாசேஜ் மற்றும் வேறு இறைச்சிகள் ஆகிய தயாரான இறைச்சி பொருட்களுக்கு நீண்ட நாட்கள் அவற்றை கெடாது பாதுகாக்க அதிக உப்பு தேவைப்படுகிறது. அதற்கு பதில், நீங்கள் புதிய உணவை உண்ண வேண்டும் மேலும் நீங்கள் இறைச்சியை சாப்பிட்டால், பிறகு ஏதாவது கசாப்பு கடையில் புதிய இறைச்சியை வாங்கவேண்டும்.

5) மது

மது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்ல விஷயமாக கருதப்படவில்லை ஆனால் அது குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் உள்ள மக்களுக்கு தீங்கு விளைவிக்கும். மதுவில் அதிக சக்கரை நிறைந்திருக்கும் அல்லது அது சக்கரையில் அல்லது மற்ற பானங்களில் கலந்து வைத்திருக்கலாம். மது அருந்துவது உடல் வறட்சிக்கு வழிவகுக்கும் மேலும் அது உடல் எடை அதிகரிக்கவும் காரணமாகும். இவ்விரண்டும் மக்களுக்கு உயர் இரத்த அழுத்ததிற்கு அபாயகரமானது.

6) பேக்கரி பொருட்கள்

பாஸ்டரிஸ், குக்கீஸ், கேக்ஸ், டோனட்ஸ் மற்றும் வேறு பேக்கரி பொருட்கள் சக்கரை நிறைந்தும் மற்றும் கொழுப்பு நிறைந்தும் இருக்கிறது. வெளியே சாப்பிடும்போது, முழு மேசைக்கும் ஒரு தட்டு இனிப்புகளை பகிரவும் அதனால் நீங்கள் உங்களுக்கு தேவையானதை விட அதிகம் உண்ண மாட்டீர்கள். ஆப்பிள், பேரிட்சை, சுத்தமான பனை சாறு, கலப்படமில்லாத தேன், மேலும் தேங்காயில் செய்த சக்கரை போன்றவற்றால் சாஸ் செய்து, வீட்டில் சமைக்கலாம். இவை அனைத்திலும் கிளைசெமிக் அளவு குறைவாக இருக்கிறது மேலும் ஆன்டிஆக்சிடன்ட்ஸ், எலெக்ட்ரோலைட்ஸ் மற்றும் ஊட்டச்சத்து போன்ற வேறு முக்கியமானவைகளையும் தருகிறது.

7) மென் பானங்கள்

அதிக சக்கரை உணவிற்கு ஈடாக ஒரே ஒரு பாட்டில் சோடா/கார்போனேட்டட் பானம் உங்களை போதுமானவரை பாதிபிற்குள்ளாகும். உங்கள் ஆற்றலை காஃபினேடட் சோடா அருந்தியதும்  உடனடியாக ஊக்கப்படுத்தும், ஆனால் இந்த உணர்வு சிறிது நேரத்திற்குத்தான். கொஞ்சம் இனிப்பான டீ அல்லது காபியால், உங்களுக்கு சரியான அளவு காஃபின் கிடைக்கும் மேலும் மென் பானங்களைவிட இவை சிறந்த தேர்வாகும். உடனடி ஆற்றலையும் மற்றும் புத்துணர்ச்சியையும் கிடைக்க, சில பழ சாறுகள் அல்லது குளிர்ந்த நீரில் புதினா ஆகியவற்றை குடிக்க முயற்சிப்பது மேலும் சிறந்தது.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் உள்ளது. ஒரு சில நொடிகள் நல்ல சுவைக்காக உங்கள் ஆரோக்கியத்தை அபாயத்தில் தள்ளாமல் இருப்பது சிறந்தது. இந்த செயல்முறை சில நேரம் எடுக்கும் ஆனால் விரைவில் நீங்கள் புதிய சுவையை ஏற்றுக்கொண்டால் சிறப்பாக உணர்வதை கண்டுபிடிப்பீர்கள்.

படத்தின் ஆதாரம்: பிக்ஸாபே, விக்கிபீடியா காமன்ஸ், மாக்ஸ்பிக்ஸெல், பிலிக்கர்,பிஎக்ஸ்ஹியர், பெக்செல்ஸ்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!