International
சமையல்

சிவப்பு அரிசி வெண் பொங்கல்

சிவப்பு அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அரிசியை வைத்து வெண் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானபொருள்கள் :

சிவப்பு அரிசி – ஒரு கப்
பாசிப்பருப்பு – கால் கப்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1ஸ்பூன்
முந்திரி – சிறிதளவு
நறுக்கிய இஞ்சி – 1 ஸ்பூன்
ப.மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 1 ஸ்பூன்
நெய் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

பாசிப்பருப்பை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.

சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவிடவும்.

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் ஊறவைத்த சிவப்பு அரிசி, பாசிப்பருப்பு, 3 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து 4 விசில் வைத்து வேக வைத்து இறக்கவும்.

கடாயில் எண்ணெய், நெய் விட்டு சூடானதும், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, ப.மிளகாய், முந்திரி சேர்த்து தாளித்த பின்னர் வேக வைத்த அரிசி – பருப்பு கலவையில் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

சத்து நிறைந்த சிவப்பு அரிசி பொங்கல் தயார்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு
அனுப்பி வையுங்கள்.

Related Tags :

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!