International
சமையல்

ஸ்பைசி கிரீன் ஆப்பிள் சாலட்

தினமும் காலையில் ஏதாவது ஒரு சாலட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று ஸ்பைசி கிரீன் ஆப்பிள் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்  :

கிரீன் ஆப்பிள் – பெரியது 1
வெங்காயம் – 1
தக்காளி – சிறியது 2
எலுமிச்சை சாறு – சுவைக்கு
சிவப்பு மிளகாய் தூள் – சுவைக்கு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – சுவைக்கு
தக்காளி சாஸ் – சுவைக்கு

செய்முறை :

ஆப்பிள், வெங்காயம், நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.

தக்காளியை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய ஆப்பிள், வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக கலக்கவும்.

அடுத்து அதில் சிவப்பு மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, தக்காளி சாஸ், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

சூப்பரான ஸ்பைசி கிரீன் ஆப்பிள் சாலட் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு
அனுப்பி வையுங்கள்.

Related Tags :

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!