International
தாயும் சேயும்

குழந்தைகள் மனஅழுத்ததில் உள்ளார்கள் என்பதை அறியும் அறிகுறிகள்

உங்கள் செல்ல குழந்தை வளர்ந்து பள்ளிக்கு செல்ல தயாரான உடன் உங்கள் கடமை என்பது அவர்களை பள்ளிக்கு அனுப்புவது, தயார் செய்வது, சரியாக சாப்பிடுகிறீர்களா என்று சோதனை செய்வது என்று இதனுடன் நின்றுவிடாது.

அவர்கள் பள்ளியில் பழகும்விதம், அவர்களின் நண்பர்கள், ஆசிரியர்கள் என அவர்களுடன் தொடர்புடைய அனைத்தையும் கவனித்து பார்க்க வேண்டும்.

குழந்தைகள் மனஅழுத்தம் உள்ளதாக வாய்திறந்து கூறமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு அது மனஅழுத்தம் என்பதே தெரியாது.

ஒரு பெற்றோராக அதனை கண்டறிந்து அதனை சரிசெய்ய வேண்டியது உங்கள் கடமையாகும். குழந்தைகளின் நடவடிக்கைகளை வைத்தே அவர்கள் சோகமாக உள்ளார்களா என்பதை கண்டுபித்துவிடலாம்.

இங்கே அதற்கான அறிகுறிகள் என்னவென்பதை பார்க்கலாம்
பசியில் மாற்றம்

பெரியவர்கள் மனஅழுத்தம் உள்ளபோது தவிர்க்கும் முதல் விடயம் சாப்பிடாமல் இருப்பது. இதேபோல குழந்தைகளும் சாப்பாட்டின் மீது வெறுப்பு காட்டினாலோ அல்லது சாப்பிடும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ அவர்கள் மனஅழுத்ததில் உள்ளார்கள் என்று அர்த்தம்.

பள்ளிக்கு செல்ல மறுத்தல்

 

உங்கள் குழந்தை தொடர்ச்சியாக பள்ளிக்கு செல்ல மறுத்தால் பள்ளியில் அவர்களின் மனஅழுத்தத்தை அதிகரிக்கும் விடயம் எதுவோ உள்ளது என்று அர்த்தம்.

பொதுவாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆர்வமாய் இருப்பார்கள் ஏனெனில் அங்குதான் அவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.

ஆனால் பள்ளிக்கூடத்தில் ஏற்படும் மனஅழுத்தத்தை தவிர்க்க முடியாத போது அவர்கள் பள்ளிக்கு செல்ல தயக்கம் காட்டுவார்கள்.

தலைவலி

 

உங்கள் குழந்தை அடிக்கடி தலை வலிக்கிறது என்று கூறினால் மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். மருத்துவர் அனைத்தும் சரியாக உள்ளது என்று கூறிய பின்னும் குழந்தைகள் அதையே கூறினால் அதனை முதல் எச்சரிக்கையென புரிந்துகொள்ளுங்கள்.
வயிற்று வலி

 

கடுமையான பணி ஒன்றை செய்யும் போது உங்கள் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதை நாம் அனைவருமே உணர்ந்திருப்போம்.

குழந்தைகளும் மனஅழுத்தத்துடன் இருக்கும்போது வயிறு வலிப்பதாகத்தான் கூறுவார்கள். இல்லையெனில் அவர்களுக்கும் நம்மை போன்ற உணர்வுகளே இருக்கலாம். ஆனால் எதுவாக இருப்பினும் அவர்களுக்கு அது வயிற்று வலிதான்.
படுக்கையை நனைத்தல்

 

பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது யாதெனில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் படுக்கையை நனைப்பது அவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளான தன் அறிகுறியாக கூட இருக்கலாம்.

அது அதிர்ச்சி அல்லது பாலியல் தொற்று போன்றவற்றால் ஏற்பட்டதாக கூட இருக்கலாம். 8 வயது வரை குழந்தைகள் படுக்கையை சிறுநீரில் கழிப்பது சகஜம்தான்.
குறிப்பிட்ட வார்த்தைகளை அடிக்கடி உபயோகித்தல்

 

குழந்தைளுக்கு எப்பொழுதும் மனஅழுத்தம் உள்ளதாக கூற தெரியாது. எனவே சில சொற்களை திரும்ப திரும்ப கூறுவார்கள்.

அதாவது, பயமா இருக்கு, சோகமா இருக்கு என அவர்கள் கூறும் அனைத்தும் மனஅழுத்தத்தின் அறிகுறிதான். அதுமட்டுமின்றி ” என்னை யாருக்கும் பிடிக்கவில்லை “, ” நான் யாருக்கும் முக்கியமில்லை ” , ” வேடிக்கையாக எதுவும் இல்லை ” என்று அடிக்கடி கூறுவது மனஅழுத்தத்தின் வெளிப்பாடுதான்.

தந்திரங்கள்

 

குழந்தைகள் எப்போது எல்லாம் வசதியாக உணரவில்லையா அப்போதெல்லாம் சில திருட்டுத்தனங்கள் செய்வார்கள். அவர்களின் நடத்தையில் திடீரென ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாக நீங்கள் எச்சரிக்கையாகி விடுங்கள்

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!