International
தாயும் சேயும்

குழந்தைகள் வாயில் கை வைப்பது ஏன் என்று நீங்கள் என்றாவது யோசித்ததுண்டா? அதற்கு காரணம் இது தான்

பெரும்பாலான ஏன் அனைத்துக் குழந்தைகளிடமும் பொதுவாக காணப்படும் ஒரு பழக்கம் வாயில் கையை வைப்பது. எப்பொழுது பார்த்தாலும் எந்நேரம் ஆகினும் வாயில் கையை வைத்துக் கொண்டே திரிந்து கொண்டு இருப்பர்.

அது ஏன் என்று நீங்கள் என்றாவது யோசித்ததுண்டா? குழந்தைகளின் இந்த பழக்கத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நீங்கள் எண்ணி பார்த்ததுண்டா?

இந்த பதிப்பில் குழந்தைகள் வாயில் கை வைப்பதற்கான காரணங்களும் அதை தடுக்கும் முறைகள் பற்றியும் படித்து அறியலாம்.
பாதுகாப்பு உணர்வு

குழந்தைகள் பத்து மாதங்கள் தாயின் இருட்டறைக்குள் வாழ்ந்து எது வெளிச்சம், எது இருட்டு மனிதர்கள் எப்படி இருப்பர் என எதை பற்றியும் அறியாமல், தெரியாமல் வாழ்ந்து வந்து இருப்பர் அவ்வாறு வளர்ந்த அவர்கள் பிறந்த பின் தனியே குறுகி இருந்த இடத்தை விட்டு வெளிவந்த பின், பலவித மாற்றங்களை பார்க்கின்றனர்.

பிறந்த குழந்தைகளுக்கு எது கை எது வாய் என்று கூட தெரியாது; ஏதோ பயத்தில் தானாக இது மாதிரி வைத்துக் கொள்கின்றன. இப்படி வைத்துக் கொண்டால் அவர்தம் மனதிற்கு பாதுகாப்பு உணர்வு கிடைக்கிறது.

பசி உணர்வு

குழந்தைகளின் அழுகை, வயிற்றின் அளவு, இம்மாதிரி கையை வாயில் வைத்தல் போன்ற அறிகுறிகளின் மூலம் குழந்தையின் தேவையை அறிந்து தாய் உணவளிக்க வேண்டும் பசி நீங்கினால், குழந்தைகள் கையை வாயில் வைக்கும் அவசியம் இல்லாமல் போய்விடும்.

தூக்கம்

குழந்தைகள் தூங்கும் பொழுது கையை அடிக்கடி வாயில் வைத்துக் கொள்வர் ஏனெனில் அவர்களுக்கு தூங்கும் பொழுது ஒருவித பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும்

எனவே, நீங்கள் எத்தனை முறை கையை எடுத்து விட்டாலும் மீண்டும் மீண்டும் குழந்தைகள் வாயில் கையை வைத்துக் கொண்டு இருப்பதற்கு அவர்கள் மனதில் உள்ள பயம், பசி போன்ற உணர்ச்சிகளே

தனிமை உணர்வு

குழந்தைகளை அதிக நேரம் தனித்து விட்டாலோ, அன்னையானவள் குழந்தையை அதிக நேரம் பிரிந்து வேறு எங்கும் சென்று விட்டாலோ குழந்தை பயம், பதட்டம் மற்றும் அன்னையை காணவில்லை என்ற ஏக்கம், குழந்தைக்கு அசௌகரியம் ஏற்படல் போன்ற காரணங்களால் கையை எடுத்து வாயில் வைத்துக் கொள்ளும்.

இந்த உணர்வு தனித்து விடப்படும் அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடியதே!
பல் முளைத்தல்

குழந்தைகளுக்கு பல் முளைக்கும் சமயத்தில் எதையாவது கடித்துக் கொண்டே இருக்க வேண்டும் மெல்ல வேண்டும் போன்று இருக்கும். அதனால் அந்த சமயத்தில் குழந்தைகள் தங்கள் கையை முழுவதுமாக வாய்க்குள் விட்டு கொள்கின்றனர்.

தீர்வு தான் என்ன?

காரணத்தை அறிந்து கண்டோம் அந்த காரணம் ஏற்படாத சூழலை உருவாக்கி குழந்தைகளை காப்பாற்றுவது தான் தீர்வு.

மேலே பார்த்த காரணங்களில் குழந்தைகளின் பசியை போக்க போதுமான அளவு தாய்ப்பால் அளித்து, குழந்தையை கையை வாயில் வைக்க விடாமல் பார்த்துக் கொள்வது, குழந்தையை தனித்து விடாமல், பத்திரமாக கூடவே இருந்து பார்த்து கொண்டு அதன் பய உணர்வு மற்றும் தனிமை உணர்வுகளை போக்க முயற்சிக்க வேண்டும்

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!