International
தாயும் சேயும்

நிச்சயதார்த்த மாத்திரையை பெண்கள் ஏன் கட்டாயம் குடிக்க வேண்டும் தெரியுமா?

பெண்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் பிறவிக்கோளாறு இல்லாத ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கமுடியும்.

பெண்களுக்கு ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்க போலிக் ஆசிட் அவசியம்.
நிச்சயதார்த்த மாத்திரை என்ற பெயரைக்கேட்டதும் பலரும் இது ஆண்மைக்கான சமாச்சாரம் என்று நினைக்கலாம். ஆனால், இது பெண்களுக்கான ஒன்று. பெண்களுக்கு மட்டுமல்ல. வருங்கால சந்ததிகளை ஆரோக்கியமாக உருவாக்க அவசியமான ஒன்று. பிறக்கும் குழந்தைகளில் பலர் பிறவிக் கோளாறுடன் பிறக்கின்றனர்.

மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது, மூளையில் நீர் கோர்ப்பது, குடல் வெளியில் இருப்பது, சிறுநீரகங்கள் இல்லாமல் பிறப்பது, கை, கால் எலும்பு வளராமல் இருப்பது. இப்படிப்பட்ட குழந்தைகள் நீண்ட நாள் உயிர்வாழ முடியாது.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற அதிநவீன மருத்துவக் கருவிகள் கூட 70 சதவீத குறைகளை மட்டுமே கண்டுபிடிக்க உதவுகின்றன. மீதி 30 சதவீத குறைகளை கண்டுபிடிக்கவே முடியாது. காது கேளாமல் இருப்பது போன்ற பிறவிக் கோளாறுகள் வளரவளரத்தான் தெரியும். ஸ்கேன் என்பது உயிரைப் பாதிக்கும் பிரச்சினைகளை மட்டுமே கண்டுகொள்ள முடியும் என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.

பிறவிக் கோளாறு எப்படி வருகிறது?

அதற்கு மரபு ரீதியிலான, சுற்றுச்சூழல் என்று ஏகப்பட்ட காரணங்களை மருத்துவம் சொன்னாலும், மனக் கோளாறு, முதுகுத் தண்டு பிரச்சினைகளுடன் பிறக்கும் குழந்தைகள்தான் அதிகம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், இந்தப் பிறவிக் கோளாறை பெண்கள் நினைத்தால் தங்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்க முடியும் என்கிறது, மருத்துவம். இந்தக் குறைபாட்டுடன் குழந்தைகள் பிறக்க போலிக் ஆசிட் குறைவாக இருப்பதே காரணம்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!