International
தாயும் சேயும்

பெற்றோர்களே எச்சரிக்கை – குழந்தைகளுக்கு நெப்கினை பயன்படுத்துவதால் ஆபத்து

குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் nappies இல் அபாயகரமான இரசாயனங்கள் இருப்பது தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளது. பிரான்ஸ் தேசிய சுகாதாரத்துறை அதிகாரிகளினால் வெளியிடப்பட்டுள்ள இந்த தகவலால் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய களைக்கொல்லியான, மனித உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய, glyphosate(கிளேபோசெட்) உள்ளிட்ட இரசாயனங்கள் காணப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரசாயனங்கள், குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் குழந்தைகளின் நலனுக்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை என பிரான்சின் சுகாதாரத்துறை அமைச்சரான Agnès Buzyn, தெரிவித்துள்ளார். இதேவேளை, சுகாதாரம், நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், nappies தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு 15 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!