International
பெண்கள்

எந்தெந்த மலரை எவ்வளவு மணிநேரம் வரை தலையில் வைத்திருக்கலாம் தெரிந்து கொள்வோம்…!

பெண்கள் தலையில் பூச்சூடுவதால் மனம் புத்துணர்ச்சி அடைவதுடன் பல்வேறு நோய்களையும் தீர்க்க முடியும்.

rose

ரோஜாப்பூ – தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும், மல்லிகைப்பூ – மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.

fdh x

செண்பகப்பூ – வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.

vfdghgv

பாதிரிப்பூ – காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.

vfdghghtr

செம்பருத்திப் பூ – தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், மகிழம்பூ – தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.

gfth

வில்வப்பூ – சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்,சித்தகத்திப்பூ – தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும், தாழம்பூ – நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.

lotaes

தாமரைப்பூ – தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.

kanagam

கனகாம்பரம்பூ – தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும், தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ – போன்ற மலர்கள் வாதம், கபம் போன்றவற்றைச் சரிசெய்யும்.

மலர்கள் சூடுவது உடலுக்கு ஆரோக்கியம் தானே என்று நினைத்து எல்லா மலர்களையும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வைத்திருக்கக்கூடாது.ஒவ்வொரு மலரையும் குறிப்பிட்ட மணிநேரம்வரை மட்டுமே தலையில் சூட வேண்டும்.

முல்லைப்பூ – 18 மணி நேரம், அல்லிப்பூ – 3 நாள்கள் வரை, தாழம்பூ – 5 நாள்கள் வரை
ரோஜாப்பூ – 2 நாள்கள் வரை, மல்லிகைப்பூ – அரை நாள் வரை, செண்பகப்பூ – 15 நாள்கள் வரை, சந்தனப்பூ – 1 நாள்

மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ – சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ – இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.

 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!