International
பெண்கள்

செயற்கை கருவூட்டல் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியவை

செயற்கை கருவூட்டல் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியவைநீங்கள் இயற்கையாக கருவுற்ற நிலையை அடையாத சமீபத்தில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது தான் இந்த செயற்கை கருவூட்டல் எனப்படுவது.

செயற்கை கருவூட்டல் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியவை
நீங்கள் இயற்கையாக கருவுற்ற நிலையை அடையாத சமீபத்தில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது தான் இந்த செயற்கை கருவூட்டல் எனப்படுவது. இந்த செயற்கை கருவூட்டல் என்பது நாம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான நன்மையை விதைத்தாலும், ஒரு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தவும் கூடும். அவற்றை பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.

இந்த செயற்கை கருவூட்டலில் மருத்துவர்கள் பெண்ணின் கருப்பை, ஃபலோபியன் குழாயில் விந்துவை செலுத்துவார்கள். இதை தான் ‘உட்சுரப்பியல் கருவூட்டல்’ என அழைக்கப்படுகிறது.

கருவுறுதல் பிரச்சனைக்கான பல தீர்வை இந்த வழிமுறைகள் தருகிறது. கருப்பைக்கு தேவையான அளவில் விந்து வெளிப்பாடு என்பது இருந்தால் மட்டுமே ஒரு கரு முட்டை என்பது உருவாகும். அதனால், இந்த குறைபாடு என்பது ஆண்களுக்கும் ஏற்படக்கூடும். பெண்கள் மேல் மட்டுமே தவறு சொல்வது மடத்தனமான ஒன்று.

உங்கள் மருத்துவர் அண்டவிடுப்பு கருவிகள், அல்ட்ரா சவுண்ட், அல்லது இரத்த பரிசோதனை மூலம் செயற்கை கருத்தரித்தல் என்பதை செய்வார். அதற்கு உங்கள் துணையின் விந்து மாதிரியை நீங்கள் தர வேண்டியது அவசியம். அத்துடன் உங்கள் துணை குறைந்தது இரண்டு முதல் ஐந்து நாட்களுக்கு உடலுறவில் ஈடுபட வேண்டாமென மருத்துவர் கூறுவார். இதற்கு காரணம், உங்கள் கணவர் உடலில் உருவாகும் விந்தின் அளவு என்பது நாளில் எத்தகைய எண்ணிக்கையுடன் காணப்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளவே.

உங்கள் வீடு மருத்துவமனைக்கு அருகாமையில் இருந்தால், உங்கள் கணவரின் விந்துவை வீட்டிலிருந்தே நீங்கள் எடுத்து செல்லலாம். ஏனெனில், ஒருசிலர் மிகவும் கூச்சம் கொள்ளக்கூடும். அத்துடன் மற்றுமொரு காரணம் என்னெவென்றால், விந்துவை வெளியேறிய ஒரு மணி நேரத்தில் பரிசோதிக்க வேண்டியது அவசியமாகும். விந்து வெளியேற்றத்தை சுத்தப்படுத்தும் சூழல் என்பது மருத்துவமனையில் மிகவும் குறைவு, ஆகவே ஒரு பெண்ணுக்கு இதனால் அசவுகரிய நிலை ஏற்படக்கூடும்.

மருத்துவர்களிடம் கொடுக்கப்படும் விந்து மாதிரிகளில் எது சிறந்தது என்பதை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த விந்து மாதிரியை கொண்டு உங்கள் பிறப்புறுப்பு மற்றும் கருப்பையில் விந்துவை செலுத்துவார்கள்.

இந்த செயற்கை கருத்தரித்தல் என்பது சிறிய நேரத்தில் செய்ய முடிவதோடு வலி அற்றதாகவும் அமைகிறது. இந்த செயற்கை கருத்திரித்தலின் போது தசைப்பிடிப்பு ஏற்பட, லேசான இரத்த கசிவும் ஏற்படலாம். இந்த முறையில் நீங்கள் 15 முதல் 45 நிமிடங்களுக்கு படுத்திருக்க வேண்டியது அவசியமாக, அப்போது தான் செலுத்தப்பட்ட விந்து வேலை செய்யும். அதன்பிறகு நீங்கள் சகஜ நிலைக்கு திரும்பிவிடலாம்.

சில சமயத்தில் மருத்துவர் கருவுறுதல் மருந்தான க்லோமிபென் சிட்ரேட்டை செலுத்துவார்கள். இதனால் உங்கள் உடம்பில் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டை உருவாக உதவும்.

செயற்கை கருத்தரித்தல் எல்லோருக்கும் வெற்றிக்கரமான முடிவைத்தரும் எனவும் சொல்ல முடியாது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!