International
பெண்கள்

பெண்களிடம் எப்படி காதலை சொல்லலாம்?

ஒரு ஆண் ஒரு பெண்ணிடமோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணிடமோ, தங்கள் காதலை வெளிப்படுத்தி, அன்பை இணையிடம் தொடர்கிறார்கள். பெண்களைத் துரத்தித்துரத்தி காதல் செய்வதால் ஒரு பயனும் இல்லை.

தன் மீது விருப்பம் இல்லாத பெண்ணின் மீது ‘காதலை வெளிப்படுத்துகிறேன்’ என்ற பெயரில் தொந்தரவு செய்வதால், பெண் உட்சபட்ச கோபம் அடையக் கூடுமே தவிர , எந்தவிதத்திலும் காதல் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. அப்படின்னா எப்படி தான் காதலை சொல்வது…

பொய் சொல்லக் கூடாது

நீங்கள் விரும்பும் பெண் அழகினாலோ, கல்வி, வசதி வாய்ப்புகளாலோ அல்லது மற்ற காரணங்களாலோ உங்களை ஈர்த்திருக்கலாம்.

இதில், தனக்கு காதல் வந்த காரணத்தை நேரடியாகச் சொல்லாமல், தனக்கு சௌகரியமாக பொய்யான காரணத்தைத் சொல்லி காதலை வெளிப்படுத்துவது கூடவே கூடாது.

நீங்கள் எந்த விஷயத்துக்காக அவரை விரும்புகிறீர்கள் என்பதை முதல் முறையிலேயே சொல்லிவிடுவது நல்லது.

உனக்குப் பிடிச்சா மட்டும் ஓகே சொல்லு

தனக்கு ஏற்கெனவே தெரிந்த பெண்ணாக இருந்தாலும் சரி, புதிதாக அறிமுகமாகி இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி, உங்கள் காதலை வெளிப்படுத்திய நொடியில் இருந்து அவரிடம் இருந்து ‘ஆம்’ என்ற பதிலே வரவேண்டும் என்பதை எதிர்ப்பார்க்காதீர்கள்.

‘இது என் விருப்பம், அதே போல உனக்கு என்னைப் பிடித்திருந்தால் மட்டும் சம்மதி’ என்று சொல்லலாம். இப்படிச் செய்வது உங்கள் மீது மரியாதையை உயர்த்தும்.

எடுத்ததும் ஐ லவ் யூ வேண்டவ வேண்டாம்

முதல் புரபோசலை ‘ஐ லவ் யூ’ என்ற வாக்கியமாக இல்லாமல் ,வேறு எப்படி எல்லாம் இருக்கலாம் என்று சிலர் தேடிப்பிடித்து முயற்சித்து, வித்தியாசமாகச் சொன்னாலும் பெருமளவில் ‘ஐ லவ் யூ’ என்கிற வாக்கியமே காதலை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

ஆகவே, ‘ஐ லவ் யூ’ வை தனக்குப் பிடித்த பெண்ணிடம் சொல்வதற்கு முன்பாக , உங்கள் மீது சிறு அளவிலாவது அந்தப் பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு ‘ஐ லவ் யூ’ சொல்லுங்கள்.

நான் இப்படித்தான்’னு சொல்வதுதான் பெஸ்ட்

நீங்கள் விரும்பும் பெண் உங்களுடைய தோற்றம், பேச்சு, பழகும் விதம் இதையெல்லாம் பார்த்து உங்கள் மீது வேறொரு பிம்பத்தை வைத்திருக்கலாம்.

ஆனால், நீங்கள் அவர்களின் நினைப்புக்கு அப்படியே நேர்மாறாக இருக்கலாம். பார்த்ததும் காதல் என்பது திரைப்படத்திற்கு வேண்டுமானால் சுவாரஸ்யமாக இருக்கலாம்.

அதனால், உங்கள் கல்வி, வேலை, குடும்பச்சூழல், உங்கள் எதிர்காலத் திட்டம், பிடித்தவை, பிடிக்காதவை உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை அவர்களிடம் தெரிவித்து, அவர்கள் அவற்றையெல்லாம் தெளிவாகப் புரிந்துகொண்டார்களா என்று தெரிந்த பின் காதலைச் சொல்வது நல்லது.

அதே போல பெண்ணைப் பற்றிய முழு விவரங்களை நீங்களும் தெரிந்துவைத்துக்கொள்வதும் அவசியம்.

செல்போன் புரபோசல் வேண்டவே வேண்டாம்

ஆணுக்கும் பெண்ணுக்குமான தகவல் தொடர்பு செல்போன் வழியே பரிமாறப்பட்டாலும் நீங்கள் முதன் முதலாக வெளிப்படுத்தும் காதல், நேரில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.

நேரில் சொல்லும்போது, அந்தத் தருணத்தில் உங்கள் முகங்களில் வெளிப்படும் மலர்ச்சி உங்களுக்குக் கிடைக்கும் வாழ்நாள் பொக்கிஷம். அந்த அனுபவத்தைத் தவறவிடாதீர்கள்.

கட்டாயப்படுத்துவது கூடவே கூடாது

ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் விருப்பம் இல்லாதவரிடம் கட்டாயப்படுத்திக் காதலைச் சொல்வது நல்லதல்ல. அதனால், நீங்கள் காதலிக்கும் நபர் உங்கள் காதலை ஏற்றுக்கொள்ளப் போதுமான அவகாசம் கொடுங்கள்.

ரத்தத்தால் கடிதம் எழுதுவது, அழுது கெஞ்சுவது, போகும் இடமெல்லாம் பின் தொடர்வது இதெல்லாம் காதலில் சேராது. உங்கள் மீது அனுதாபத்தை ஏற்படுத்தி காதலிக்க வைத்தால், அதுவும் கட்டாயப்படுத்துவது போலத்தான். அதனால், காதலை மெல்லிய பூங்காற்றாய் நுகரப் பழகுங்கள்.

share
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: Alert: Content is protected !!