International
பெண்கள்

பெண்கள்  தங்களின் கைப்பையில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டியவை!!!

இன்றைய காலகட்டத்தில் வெளியில் செல்லும் பெண்கள் தங்கள் கைபைகளை எடுத்துச் செல்லும் வழக்கம் பரவலாக காணப்படுகிறது. ஆனால் அதில் எதை கொண்டு செல்வது என்பது பற்றி யாரும் பெரிதாக தெரிந்துக்  கொள்வது இல்லை.

செலவுக்கு தேவையான பணம் வைத்திருப்பதுடன், அவற்றை உள்பாக்கெட்டில் வைத்திருப்பது நல்லது. இதனால் பணம் தொலைந்து போகாமல் தடுக்கப்படுவதோடு, தேவையற்ற செலவுகளும் தடுக்கப்படும்.

தொலைபேசி தொலைந்து போனால், யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படலாம். அதனை தவிர்ப்பதற்காக மிக முக்கியமான இலக்கங்களை மட்டும் குறித்து ஒரு சிறிய டைரியை வைத்துக் கொள்ளலாம்.

பேரூந்தில் பயணிப்பவர்களாக இருந்தால் பயண அடையாள அட்டையையும், வாகனம் ஓட்டுபவராக இருப்பின் லைசென்சையும், கைப்பையில் ஒரு நிரந்தரமாக வைத்துக் கொள்ளவும். கைப்பை தொலைந்து போனால் கிடைக்கக்கூடும் என்பதால் அடையாள அட்டை நகலை எடுத்துச் செல்லலாம்.

எப்போதும் ஒரு பேனா மற்றும் சில்லறைகளையும் வைத்திருப்பது நல்லது.

எப்போதும் கைப்பையில் கவர் செய்யப்பட்ட கத்தி, பாதுகாப்பிற்கென பெப்பர் ஸ்ப்ரே வைத்திருப்பது நல்லது.

கைப்பையின் ஒரு தனியறையில் நாப்கின் வைத்திருக்கவும்.

சேப்டி பின், ஹேர்பின்கள், மற்றும் தலைவலி மாத்திரை, தைலம் என்பனவும் தேவைக்கு ஏற்றவாறு வைத்திருக்கலாம்.

தேவைக்கேற்ப அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சார்ஜர், பவர்பேக்கையும் எடுத்துச் செல்லலாம்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு கைப்பைகளை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!