International
மலேசியா

விபசாரத்தில் இந்தோ. நடிகையா? மலேசிய போலீஸ் விசாரணை!

கோலாலம்பூர், ஜன.10- இந்தோனிசிய நடிகை ஒருவர் அடையாளம் தெரியாத ஒரு நபருடன் நிர்வாணக் குளியல் போடும் படம் பரவலாக உலவத் தொடங்கியதை அடுத்து புக்கிட் அமான் போலீசார் புலன் விசாரனையில் குதித்து உள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? மலேசியாவில் வெளிநாட்டு நடிகைகள் சம்பந்தப்பட்ட விபசாரம் நடைபெறுகிறதா? என்ற சந்தேகங்களுக்கு இடையே போலீசார் புலன் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

இந்தோனிசிய நடிகையான 27 வயதுடைய வனிஸா ஏஞ்சலின் ஆபாசக் குளியல் புகைப்படம் பரவலாகி வருகிறது. இந்தப் படம் கடந்த மாதம் கோலாலம்பூரில் எடுக்கப்பட்டுள்ளது என்று உள்ளூர் தினசரி ஒன்றின் செய்தி கூறுகிறது.

எனினும், இந்தோனிசியாவைச் சேர்ந்த நடிகைகள் இத்தகைய விபசாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து எந்தவொரு தகவலும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று புக்கிட் அமான் விபசார, சூதாட்ட மற்றும் இரகசிய குண்டர் கும்பல் ஓழிப்பு பிரிவின் துணை இயக்குனர் டத்தோ ரோஹாய்மி இசா தெரிவித்தார்.

சுராபாயாவில் கடந்த சனிக்கிழமை விபசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்களை அந்நாட்டுப் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த இருவரில் ஒருவர் வனிஸா ஏஞ்சல் என்றும் மற்றொருவர் மாடல் அழகி என்றும் தெரிய வந்துள்ளது.

The post விபசாரத்தில் இந்தோ. நடிகையா? மலேசிய போலீஸ் விசாரணை! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!