International
ஆண்டு பலன் - 2018

விருச்சிகம் ராசி 2018 புத்தாண்டு பலன்கள்!

ஜென்ம சனி விலகி விட்டதால் விருச்சிகம் ராசியினர் 2018ம் வருடம் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். கடந்த ஐந்து வருடங்களாக ஏழரை சனியின் பாதிப்புகள் இருந்தது. வேலை, தொழில், வியாபாரம், குடுப்பிமத்தில் சண்டை, சச்சரவு என்று இருந்தது. குறிப்பாக அனுஷம் நட்சத்திரம் பிறந்தவர்களுக்கு கடுமையாக குழப்பங்கள், போராட்டங்கள், சிக்கல் போன்றவற்றை சந்திக்க நேரிட்டது. கேட்டை, விசாகம் நட்சத்திரம் பிறந்தவர்களுக்கும் எந்த நல்லவை நடைபெறாமல் இருந்தது. இனி அந்த நிலை மாரி உங்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது.

பொதுவான பலன்கள்

விருச்சகம் ராசியினருக்கு 2018ம் புத்தாண்டு நல்ல மாற்றங்கள் கெடுதல்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கும். தந்தை வழி உறவு, உடன் பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் மனக்கஷ்டம், சண்டை என்று இருந்தால் அது இப்பொழுது தீர்வுக்கு வந்து விடும்.

ஜீவனம் அமைப்பு சரியாக நிலையாக இல்லை என்று இருப்பவர்களுக்கு நிலையான வருமானம் வரக்கூடும். மாதம் தொடக்கத்தில் நல்ல வருமானம் மற்றும் சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும். விருச்சகம் ராசியினர் யார் விஷயத்திலும் தலையீடு, பிரச்சனைகளை தீர்த்து வைக்க செல்லாதீர்கள்.  மறைமுக எதிரிகள், பொறாமை என்று இருப்பதால் கவனமுடன் செயல் படுங்கள்.

விருச்சகம் ராசியினர் வாகனத்தில் வேகம் இருந்தால் சோகம் தான் உண்டாகும். பாத சனி நடைபெறுவதால் பயணங்களில் மற்றும் சாலையில் செல்வது கவனமாக செல்லுங்கள். நீங்கள் ஓரமாக தான் சென்று இருப்பீர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் தடுமாறி உங்களை தட்டி செல்ல நேரிடலாம். எதிலும் கவனம், எச்சரிக்கையுடன் செயல் புரிய வேண்டிய காலம் கட்டம் இது.

இதுவரை குடும்பத்தில் விரிசல், சண்டை, சச்சரவு என்று இருந்தவர்கள் தானாக பேசுவார்கள். ஒற்றுமை நிலவும். வாழ்க்கை துணை உறுதுணையாக இருப்பார். செலவுகள் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தாலும் அதனை நிலையான வைப்பு சேமித்து வையுங்கள்.

 

உத்தியோகஸ்தர்கள்

படைப்பு தொழில், நுணுக்கமான வேலை செய்பவர்கள், கலை துறை இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிட்டும். சிலருக்கு பெயர், பாராட்டும் கிடைக்கும். தீர சிந்தனை செய்த பிறகு முடிவெடுங்கள். அவசரம் வேண்டும். எதிலும் நிதானமாக பொறுமையுடன் கையாளுங்கள். செய்யும் தொழில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். யாருக்கும்  ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பார்த்த இடத்தில் நல்ல செய்து வரும். நேரம் தவறாமலும், திட்டமிட்டு செய்யும் செயல்கள் வெற்றியை கொடுக்கும்.

வியாபாரம் / தொழிற்பிரிவினர்

செய்யும் தொழில் நேரம் தவறாமல் வேலை செய்து முடித்திடுங்கள். குறுக்கு புத்தி, வீண் பேச்சு, ஏனோதானோ என்று செயல்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களிடம் பணிபுரிபவர் ஏதேனும் தவறு செய்தால் தட்டி கொடுத்து செல்லுங்கள். உங்கள் தொழில், வியாபாரம் கடன் கிடைக்கும். வெளிநாட்டு வர்த்தகம் நன்றாக லாபகரமாக இருக்கும். முழு முயற்சியுடன், முடங்கி கிடைக்காமல் உழைத்தால் வெற்றி நிச்சயம் உண்டாகும்.

பெண்கள்

குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் இருந்தால் அதனை சமாளித்து விடுவீர்கள். தடைபட்ட சுபகாரியம் நல்ல விதமாக அமையும். இதுவரை மகன் அல்லது மகளுக்கு நல்ல வரன் கிடைக்கும் இருந்தவர்களுக்கு நல்ல இடத்தில் இருந்து செய்தி கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, வெளியூர் பயணங்கள் நன்றாக அமையும். செலவுகள் அதிகமாக இருந்தே கொண்டே இருக்கிறதே என்று நினைப்பவர்கள் நிலையான வைப்பில் பணத்தை சேமித்து வையுங்கள். வீண் விரயத்தை தவிர்க்க ஒன்று பணம் எடுக்காத வகையில் சேர்த்து வைக்க வேண்டும் இல்லை என்றால் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கலாம்.

 

மாணவ மாணவிகள்

அன்றன்றே படித்து விட்டால் எதிர்பார்த்த மதிப்பெண் மற்றும் பரீட்சை சமயத்தில் சுலபமாக இருக்கும். பொறுப்பு உணர்ந்து உயர்கல்வி, ஏதேனும் ஓய்வு நேர படிப்பு படித்து முன்னேற்றத்திற்கான வழியை காணுங்கள். எதிர்பார்த்த கல்வி கடன், உயர் கல்வி, வெளியூர் சென்று பயலும் பாக்கியும் உண்டாகும். விருச்சகம் ராசி பிள்ளைகள் இஷ்ட தெய்வம் வணங்கி படிக்கச் மற்றும் புதிய கல்லூரி விண்ணப்பம் கொடுக்கும் பொழுது  செய்தால் நல்ல பலன் கிடைக்கும்

உடல் நிலை

அடிவயிறு, மலக்குடல், கர்ப்பப்பை, உணவுப்பாதை , சிறுநீரகம் போன்றவற்றில் ஏதேனும் பிரச்சனை தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். அறுவை சிகிச்சை செய்தவர்கள் அதே பிரச்சனை தோன்றக்கூடும். மேலே கூறியது எல்லா விருச்சகம் ராசியினருக்கு நடைபெறாது. சுய ஜாதகத்தின் தசை மற்ற அமைப்பு வைத்து தான் நடைபெறும். மேலே கூறியது அனைத்தும் விருச்சகம் ராசியின் புத்தாண்டு பொதுப்பலன்கள் மட்டுமே.

பரிகாரம்

விருச்சகம் ராசியினர் முருகனை , பெருமாள் வழிபாடு செய்வது வீண் குழப்பத்தை போக்கி தெளிவு பெற செய்வார்கள். வாழ்க்கையில் பல துன்பங்கள், கஷ்டம், நஷ்டம் ஏற்படும் பொழுது கடவுள் வழிபாடு செய்வது நன்மை தரும். இந்த வருடம் திருநள்ளாறு, குருவாயூர் திருத்தலம் சென்று வர நன்மைகள் உண்டாகும்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!