International
விளையாட்டு

ஆண்டிகுவா டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆண்டிகுவா டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 297 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆகியது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்  பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

மயாங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் ரகானே அரைசதம் அடிக்க இந்தியா நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் 20 ரன்களுடனும், ஜடேஜா 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ரிஷப் பந்த் மேலும் நான்கு ரன்கள் எடுத்து 24 ரன்னில் ஆட்டமிழந்தா். 8-வது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் இஷாந்த் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இஷாந்த் சர்மா 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தா்.

அரைசதம் அடித்த ஜடேஜா 58 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா 297 ரன்னில் ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கேமர் ரோச் 4 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும், ராஸ்டன் சேஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Tags :

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!