International
விளையாட்டு

இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: முதல் போட்டியில் செல்சியை 4-0 என துவம்சம் செய்தது மான்செஸ்டர் யுனைடெட்

இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் முதல் ஆட்டத்தில் செல்சியை 4-0 என துவம்சம் செய்து வெற்றியோடு தொடரை தொடங்கியுள்ளது மான்செஸ்டர் யுனைடெட்.

இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 2019-2020 சீசன் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் – செல்சி அணிகள் மோதின.

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சொந்தமான ஓல்டு டிராபோர்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் அணி சிறப்பாக விளையாடியது. ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் மார்கஸ் ரஷ்போர்டு பெனால்டி மூலம் தனது முதல் கோலை பதிவு செய்தார்.

அதன்பின் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தில் மான்செஸ்டர் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 65-வது நிமிடத்தில் அந்தோணி மார்சியல் கோல் அடித்தார். அதன்பின் பால் போக்பா கொடுத்த பந்தை 67-வது நிமிடத்தில் ரஷ்போர்டு மீண்டும் கோலாக்கினார்.

பால் போக்பா

இதனால் மான்செஸ்டர் யுனைடெட் 3-0 என முன்னிலைப் பெற்றது. 81-வது நிமிடத்தில் போக்பா கொடுத்த பந்தை டேனியல் ஜேம்ஸ் கோலாக்க அந்த அணி 4-0 என வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் செல்சி அணி ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தது.

Related Tags :

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!