International
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் – பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #IPL2019 #MIvRCB

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 31-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இரு அணி கேப்டன்கள் முன்பு டாஸ் சுண்டப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்றார். டாஸ் வென்ற அவர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இன்றைய போட்டியில் இடம் பிடித்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு:

மும்பை அணி வீரர்கள்:

ரோகித் சர்மா, குயிண்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கிரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குருணாள் பாண்டியா, ராகுல் சஹார், ஜேசன் பெஹ்ரண்டப், ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள்:

பர்திவ் படேல், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், மொயின் அலி, அக்‌ஷதீப் நாட், பவன் நெகி, உமேஷ் யாதவ், யுவேந்திர சஹல், நவ்தீப் சயினி, மொக்மது சிராஜ். #IPL2019 #MIvRCB

Related Tags :

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!