International
விளையாட்டு

கால்பந்து: யுவான்டஸை 3-2 என வீழ்த்தியது டோட்டன்ஹாம்

இன்டர்நேஷனல் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஹாரி கேனின் அபார கோலால் யுவான்டஸை 3-2 என வீழ்த்தியது டோட்டன்ஹாம்.

இன்டர்நேஷனல் சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் யுவான்டஸ் – டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் டோட்டன்ஹாம் அணியின் எரிக் லமேலா கோல் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் டோட்டன்ஹாம் 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் யுவான்டஸ் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் ஹிகுயைன், 60-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் கோல் அடித்தனர். ஆனால் 65-வது நிமிடத்தில் டோட்டன்ஹாம் அணியின் லூகாஸ் மவுரா கோல் அடிக்க ஸ்கோர் 2-2 என சமநிலை அடைந்தது.

ரொனால்டோ

அதன்பின் சுமார் 25 நிமிடங்களால் இரண்டு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. 90 நிமிடங்கள் முடிந்த பின்னர் ஆட்ட நிறுத்தத்தை கணிக்கிட்டு 4 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. 3-வது நிமிடத்தில் ஹாரி கேன் பாதி தூரத்திற்று அப்பால் இருந்து அடித்த பந்து கோலாக மாறியது. இதனால் டோட்டன்ஹாம் 3-2 என வெற்றி பெற்றது.

Related Tags :

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!