International
விளையாட்டு

சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: ஜிஎஸ்டி மற்றும் கலால்வரி, எஸ்டிஏடி அணிகள் வெற்றி


எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் ஜிஎஸ்டி மற்றும் கலால்வரி, எஸ்டிஏடி அணிகள் வெற்றி பெற்றன.

சென்னை ஆக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஜிஎஸ்டி மற்றும் கலால்வரி – தமிழ்நாடு போலீஸ் அணிகள் மோதின. இதில் ஜிஎஸ்டி மற்றும் கலால்வரி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) அணி 2-0 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வேயை வீழ்த்தியது.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் இந்திய விளையாட்டு ஆணையம் – இந்திய உணவு கழகம் தமிழ்நாடு போலீஸ்-ஸ்டேட் வங்கி (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

Related Tags :

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!