International
விளையாட்டு

டாப் 4 பேட்ஸ்மேன்கள் அதிரடியால் இந்தியா வெற்றியீட்டியது

இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் உலகக்கோப்பையின் 14-வது லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி களம் இறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன் எடுத்தது. முன்னணி வீரர்களான ரோகித் சர்மா (57) தவான் (117) விராட் கோலி (82) ஹர்திக் பாண்டியா 48 ரன் எடுத்தனர். 
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்ச்சும் ஆடினர். இருவரும் 10 ஓவர் வரை 48 ரன் சேர்த்தனர். பிஞ்ச் 36 ரன் இருக்கும்போது எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். 

அடுத்து வந்த சுமித், வானருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நேர்த்தியாக விளையாடி ரன் சேர்த்தனர். வார்னர் அரை சதம் அடித்த சிறிது நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 56 எடுத்தார். பின்னர் வந்த வீரர்களான உஸ்மான் கவாஜா 42 ரன்னிலும், மேக்ஸ்வெல் 28 ரன்னிலு அவுட் ஆகினர். அதைத்தொடர்ந்த வந்த அலெக்ஸ் கேரி அதிரடியாக ஆட இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 316 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

share
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
error: Alert: Content is protected !!