International
விளையாட்டு

பயிற்சி ஆட்டம் ‘டிரா’: மயங்க் அகர்வால், ரி‌ஷப் பண்ட் சிறப்பான ஆட்டம்


ஹாமில்டனில் நடைபெற்ற நியூசிலாந்து லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தின் 2-வது இன்னிங்சில் மயங்க் அகர்வால், ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்தியா – நியூசிலாந்து லெவன் அணிகள் மோதிய 3 நாள் பயிற்சி ஆட்டம் ஹாமில்டனில் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்னும், நியூசிலாந்து லெவன் அணி முதல் இன்னிங்சில் 235 ரன்னும் எடுத்தது. 28 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன் எடுத்து இருந்தது.

இன்று 3-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணி தொடர்ந்து ஆடியது. தொடக்க வீரர் மயங்க் அகர்வாலும், ரி‌ஷப் பண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இன்றைய ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன் எடுத்து இருந்தது. இதனால் 3 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.

அகர்வால் 81 ரன் எடுத்து ஓய்வு பெற்றார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரியும், 3 சிக்சரும் அடங்கும். ரி‌ஷப் பண்ட் 65 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 70 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

Related Tags :

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!