International
விளையாட்டு

பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தாய்லாந்து அணி தகுதி

பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தாய்லாந்து அணி தகுதிப் பெற்றுள்ளது. அதேபோல் வங்காளதேச அணியும் தகுதி பெற்றுள்ளது.

பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தாய்லாந்து அணி தகுதி

தாய்லாந்து பெண்கள் கிரிக்கெட் அணி

பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம்  ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 21-ந்தேதியில் இருந்து மார்ச் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தி முதன்முறையாக தாய்லாந்து அணி உலகக்கோப்பையில் விளையாட தகுதிப் பெற்றுள்ளது.

அதேபோல் வங்காளதேச அணி அயர்லாந்தை வீழ்த்தி குவாலிபையர்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் வங்காளதேச அணியும் தகுதி பெற்றுள்ளது.

Related Tags :

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!