International
விளையாட்டு

பொதுவான இடத்தில் போட்டியை நடத்த வேண்டும்: டேவிஸ் கோப்பை அணி வேண்டுகோள்

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை போட்டியை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மத்திய அரசு அனுமதி அளித்தது.

ஆனால், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறுதல் முடிவால் இந்தியா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துள்ளது.

டேவிஸ் கோப்பை போட்டியில் இந்திய டென்னிஸ் அசோசியேசன் என்ன சொல்கிறதோ, அதை பின்பற்றுவோம் என பாகிஸ்தான் நாட்டு டென்னிஸ் சங்கம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்திய டென்னிஸ் சங்கம் மீண்டும் பாதுகாப்பு குறித்து ஆராய்வோம் என்று கூறியது. இது ஆச்சர்யம் அளிக்கிறது என்று கூறிய இந்திய அணி கேப்டன் மகோஷ் பூபதி, போட்டியை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளா். சில வீரர்களும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

Related Tags :

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!