International
விளையாட்டு

ரஞ்சி டிராபி: ரெயில்வேஸ் அணியை 76 ரன்னில் சுருட்டியது தமிழ்நாடு


சென்னையில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் சித்தார்த், அஸ்வின் பந்து வீச்சால் ரெயில்வேஸ் அணியை 76 ரன்னில் சுருட்டியது தமிழ்நாடு.

ரஞ்சி டிராபியில் இன்று சென்னையில் தொடங்கிய ஆட்டத்தில் தமிழ்நாடு – ரெயில்வேஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ரெயில்வேஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. தமிழ்நாடு அணியின் சித்தார்த், அஸ்வின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ரெயில்வேஸ் அணி 76 ரன்னில் சுருண்டது. எம். சித்தார்த், ஆர். அஸ்வின் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர். ரெயில்வேஸ் அணியில் 3 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்னை தொட்டனர்.

பின்னர் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் அபிநவ் முகுந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் சூர்யபிரகாஷ் நிதானமாக விளையாடினார். சூர்யபிரகாஷ் 100 பந்தில் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அபிநவ் முகுந்த் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 100 ரன்னிலேயே ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 55 பந்தில் 57 ரன்கள் அடிக்க தமிழ்நாடு முதல் நாள் ஆட்ட முடிவில் 53 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் அடித்துள்ளது.

Related Tags :

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!