International
விளையாட்டு

4 பந்தில் 4 விக்கெட்: டி20-யில் 100 விக்கெட்டுக்கள் கைப்பற்றி மலிங்கா சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் நான்கு பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன் 100 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பல்லேகெலேயில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. 3-வது ஓவரை மலிங்கா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் கொலின் முன்றோ க்ளீன் போல்டானார். இந்த விக்கெட்  மூலம் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

அடுத்து வந்த ருதர்போர்டு ரன்ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து வந்த கிராண்ட்ஹோமை  க்ளீன் போல்டாக்கினார். இதன்மூலம் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார். அடுத்த வந்த ராஸ்  டெய்லரை எல்பிடபிள்யூ மூலம் வெளியேற்றி நான்கு பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்தார்.

இதற்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நான்கு பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!