International
மலேசியா

வெளியே துர்நாற்றம்; உள்ளே சடலம்!

கோலாலம்பூர்,ஜன.11- வீடு ஒன்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அண்டை வீட்டார் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அங்கு ஆடவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவம், ஜாலான் சன் பெங்கிலுள்ள ஶ்ரீ சிலாங்கூர் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பிற்பகல் 1.20 மணிக்கு நிகழ்ந்தது.

பிணமாக கண்டெடுக்கப்பட்டவர் 59 வயது அகமட் சுஹாய்மி ரோஸ்லி என்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவரது மரணத்திற்கு பின்னணியில் குற்றச்செயல்கள் எதுவும் இல்லை; அவர் அதிகளவிலான ரத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் உயிரிழந்திருப்பது சவப்பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஷாஹாருடின் அப்துல்லா தெரிவித்தார்.

The post வெளியே துர்நாற்றம்; உள்ளே சடலம்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!